பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
உருவாக்கம்1956
அமைவிடம், ,
இணையதளம்[1]

பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (PSGR Krishnammal Higher Secondary School) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், பீளமேட்டில் செயற்பட்டுவரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியானது ஜி. ஆர். கோவிந்த ராஜுலு, சந்திரகாந்தி அம்மையார் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு காமராசரால் 200 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். இப்பள்ளியில் 2018 ஆண்டு காலகட்டத்தில் 3000க்கும் அதிகமான மாணவிகள் பயிலுகின்றனர். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக இலக்கிய மன்றங்கள், அறிவியல் மன்றங்கள், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை, நுகர்வோர் மன்றம், சாலைப் பாதுகாப்பு அமைப்பு, ரெட் ரிப்பன் மன்றம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்". செய்தி. தினமலர். 18 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2019.