உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். கீர்த்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.எஸ்.கீர்த்தனா
பிறப்புஆகத்து 17, 1992 (1992-08-17) (அகவை 32)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை,
இயக்குநர்,
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
தற்போது
பெற்றோர்பார்த்திபன் (தந்தை),
சீதா (தாய்)
வாழ்க்கைத்
துணை
அக்சய் அக்கினேனி[1]

பி.எஸ்.கீர்த்தனா (P. S. Keerthana) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இயக்குநர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். கீர்த்தனா திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கீர்த்தனா 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 இல் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா தம்பதியருக்கு பிறந்தார்.[3]

தொழில்

[தொகு]

கீர்த்தனா, 2002 இல் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். செக்கச் சிவந்த வானம் மற்றும் காற்று வெளியிடை திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஒத்த செருப்பு அளவு 7 மற்றும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.[4]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parthiepan's daughter Keerthana and Akshay Akkineni tie the knot". Times of India. 2018-03-08. Retrieved 2024-11-20.
  2. "Parthiepan's daughter Keerthana and Akshay Akkineni tie the knot". Times of India. 2018-03-08. Retrieved 2024-11-20.
  3. "Keerthana Parthiepan". imdb,com. Retrieved 2024-11-20.
  4. "Keerthana Parthiepan". imdb. com. Retrieved 2024-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._கீர்த்தனா&oldid=4190581" இலிருந்து மீள்விக்கப்பட்டது