பி. எஸ். எம். சார்லசு
பி. எஸ். எம். சார்ள்ஸ் P. S. M. Charles | |
---|---|
7-வது வட மாகாண ஆளுநர் | |
பதவியில் 30 திசம்பர் 2019 – 11 அக்டோபர் 2021 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
முன்னையவர் | சுரேன் ராகவன் |
பின்னவர் | ஜீவன் தியாகராஜா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பத்தாவத்தை, இளவாலை, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
முன்னாள் கல்லூரி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
வேலை | பொதுத்துறை அலுவலர் |
பி. எஸ். எம். சார்லசு (P. S. M. Charles) என அழைக்கப்படும் பியென்சியா சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் (Piencia Sarojinidevy Manmatharajah Charles) இலங்கைப் பொதுத்துறை அலுவலரும், முன்னாள் வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]யாழ்ப்பாணம், இளவாலையில் பத்தாவத்தை என்ற கிராமத்தில்[1] கத்தோலிக்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த பி. எஸ். எம். சார்லசின் தந்தை ஒரு பாடசாலை அதிபர் ஆவார்.[2] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர் 1985 இல் ஆசிரிய சேவையில் இணைந்தார்.[1] பேராதனைப் பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேரழிவு மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.[3][4]
பணிகள்
[தொகு]1991 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவைக்கு அவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழராக இணைந்த சார்லசு[1] முதலில் அநுராதபுர மாவட்ட செயலகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார்.[1] பின்னர் வவுனியா மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக பதவியேற்று, பின்னர் கூடுதல் மாவட்ட செயலாளராகவும், 2008 அக்டோபரில் வவுனியா மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றினார்.[3][4] ஈழப்போரின் இறுதியில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 300,000 தமிழ் அகதிகளுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு பொறுப்பாளராக இருந்து செயற்பட்டார்.[5][6] 2012 மே மாதத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.[7][8]
2017 செப்டம்பரில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.[9][10] சந்தேகத்திற்கிடமான 143 சரக்குக் கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கத்தின் அழுத்தத்தை ஏற்க மறுத்ததாகக் கூறப்பட்டு, 2019 சனவரியில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[11][12] ஆனாலும், சுங்கப் பணியாளர்கள் எடுத்த தொழில்துறை நடவடிக்கை காரணமாக இவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.[13][14] 2019 நவம்பரில் இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து, இவர் சுகாதாரத்துறை மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[15][16]
வடமாகாண ஆளுநர்
[தொகு]2019 நவம்பர் 18 இல் கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து வட மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. 2019 திசம்பர் 30 இல் சார்லசு வடமாகாணத்தின் 7-ஆவது ஆளுநராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.[17][18] 2020 சனவரி 2 முதல் 2021 அக்டோபர் வரை இவர் இப்பதவியில் இருந்தார். இவருக்குப் பதிலாக ஜீவன் தியாகராஜா புதிய ஆளுநராக பொறுப்பேற்றார்.[19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”: முதலாவது பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்". வீரகேசரி. 5 சனவரி 2020. https://www.virakesari.lk/article/72545. பார்த்த நாள்: 5 சனவரி 2020.
- ↑ Daniel, Shannine (4 February 2018). "An Interview With Sarojini Charles, The DG Of Sri Lanka Customs". Roar Media (Colombo, Sri Lanka). https://roar.media/english/life/culture-identities/an-interview-with-sarojini-charles-the-dg-of-sri-lanka-customs/. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ 3.0 3.1 "Batticaloa DS appointed Customs DG". த டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2017. http://www.dailymirror.lk/article/Batticaloa-DS-appointed-Customs-DG-137324.html. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ 4.0 4.1 "Charles new DG Customs". தி ஐலண்டு. 27 செப்டம்பர் 2017. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=172364. பார்த்த நாள்: 21 திசம்பர் 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ms. P.S.M.Charles to be Governor of Sri Lanka's Tamil-speaking Northern Province". Middle East North Africa Financial Network. NewsIn.Asia (Amman, Jordan). 20 December 2019. https://menafn.com/1099452307/Ms-PSMCharles-to-be-Governor-of-Sri-Lankas-Tamil-speaking-Northern-Province. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Interview with top government official on IDP camps, returns". The New Humanitarian (Geneva, Switzerland). 11 November 2009. http://www.thenewhumanitarian.org/fr/node/247274. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Govt. reshuffles GAs". தி ஐலண்டு (இலங்கை) (Colombo, Sri Lanka). 11 May 2012. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=51600. பார்த்த நாள்: 21 December 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Jaffna GA transferred to Presidential Secretariat - report". Colombo Page (Indianapolis, U.S.A.). 10 May 2012 இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191230214907/http://www.colombopage.com/archive_12/May10_1336634114CH.php. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Batticaloa Government Agent P.S.M. Charles appointed Customs Director General". Daily News. 26 September 2017. http://www.dailynews.lk/2017/09/26/local/129438/batticaloa-government-agent-psm-charles-appointed-customs-director-general. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ Karunaratna, Sanchith (26 September 2017). "Cabinet appoints new Director General of Customs". அத தெரண. http://www.adaderana.lk/news/43245/cabinet-appoints-new-director-general-of-customs-. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Protests intensify over Customs head appointment". Daily FT (Colombo, Sri Lanka). 1 February 2019. http://www.ft.lk/business/Protests-intensify-over-Customs-head-appointment/34-672078. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Charles’ Removal Linked To Probe On 143 Containers: Mangala’s Coordinating Secretary, Finance Min. Secretary Have Given Unlawful Orders: Sirisena Stirring Up Issues Behind The Scenes". Colombo Telegraph. 2 February 2019. https://www.colombotelegraph.com/index.php/charles-removal-linked-to-probe-on-143-containers-mangalas-coordinating-secretary-finance-min-secretary-have-given-unlawful-orders-sirisena-stirring-up-issues-behind-the-scenes/. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ Bandara, Kelum (5 February 2019). "P.S.M.Charles reinstated as Customs DG". The Daily Mirror. http://www.dailymirror.lk/161985/P-S-M-Charles-reinstated-as-Customs-DG. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "P.S.M. Charles reinstated as Custom’s Director General". நியூஸ் பெர்ஸ்ட். 5 February 2019. https://www.newsfirst.lk/2019/02/05/p-s-m-charles-reinstated-as-customs-director-general/. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "Twenty new Ministry Secretaries appointed". தி ஐலண்டு. 1 திசம்பர் 2019. http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=214641. பார்த்த நாள்: 21 December 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "President appoints secretaries to 20 ministries". Colombo Page (Indianapolis, U.S.A.). 27 November 2019. http://www.colombopage.com/archive_19B/Nov27_1574864100CH.php. பார்த்த நாள்: 21 December 2019.
- ↑ "P.S.M. Charles appointed NP Governor". The Daily Mirror (Colombo, Sri Lanka). 30 December 2019. http://www.dailymirror.lk/top_story/P-S-M-Charles-appointed-NP-Governor/155-180391. பார்த்த நாள்: 30 December 2019.
- ↑ "Top civil servant Charles appointed Governor NP". தி ஐலண்டு. 31 திசம்பர் 2019 இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191231024236/http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=216285. பார்த்த நாள்: 30 December 2019.
- ↑ "Jeevan Thiagarajah sworn in as Northern Province Governor - Latest News | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)