உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எம். சையது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதநாத முகமது சையது
Padanatha Mohammed Sayeed
அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 18 திசம்பர் 2005
முன்னையவர்ஆனந்த் கீத்தே
பின்னவர்சுசில்குமார் சிண்டே
தொகுதிஇலட்சத்தீவு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–2004
பின்னவர்பி. பூக்குங்கி கோயா
தொகுதிஇலட்சத்தீவு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-05-10)10 மே 1941
ஆந்தரோத்து தீவு, இலட்சத்தீவுகள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு18 திசம்பர் 2005(2005-12-18) (அகவை 64)
சியோல், தென் கொரியா
காரணம் of deathஇதய நிறுத்தம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஏ. பி. இரகமது சையது
வாழிடம்இலட்சத்தீவு
மூலம்: [TOI obituary]

பதநாத முகமது சையது (Padanatha Mohammed Sayeed) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலட்சத்தீவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ந்து பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1941 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று இலட்சத்தீவின் ஆந்த்ரோட்டு தீவில் பிறந்தார். மங்களூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும், மும்பை சித்தார்த்தா சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.

புனேவில் உள்ள இந்திய சமுதாயக் கல்லூரியில் சட்டப் பட்டதாரியான இவரது மகன் முகம்மது அம்துல்லா சையதும் 26 வயதில் இலட்சத்தீவு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 ஆவது மக்களவையில் இளைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சையது முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு தனது 26ஆவது வயதில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலட்சத்தீவிலிருந்து அமைச்சரான முதல் மற்றும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

1979-1980 ஆம் ஆண்டுகளில் மத்திய மாநில, எஃகு, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சராக பணியாற்றினார்; 1993–1995 ஆம் ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சராகவும் 1995–1996 ஆம் ஆண்டுகளீல் மத்திய மாநில தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராகவும், 1998-2004 ஆண்டுகளில் மக்களவையின் துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றினார்.

1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சையது 2004 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து பத்து முறை இலட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் டாக்டர் பூக்குங்கிகோயாவிடம் 71 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.[1] பின்னர் தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராச்யசபா உறுப்பினரானார்.[2] 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 அன்று சியோலில் மாரடைப்பால் இறந்தபோது சையது மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical report on general elections, 2004 to the Fourteenth Lok Sabha" (PDF). ECI. p. 361. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  2. "Delhi Pradesh Congress Committee". Delhi Pradesh Congress Committee. Archived from the original on 13 August 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  3. "Cabinet condoles PM Sayeed's death". The Times of India. 19 December 2005. http://timesofindia.indiatimes.com/india/Cabinet-condoles-PM-Sayeeds-death/articleshow/1336945.cms. பார்த்த நாள்: 30 May 2014. 
  4. "Power Minister P M Sayeed is dead". IBNLive. 19 December 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140605114710/http://ibnlive.in.com/news/power-minister-p-m-sayeed-is-dead/2514-4-2.html. பார்த்த நாள்: 30 May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._சையது&oldid=3679038" இலிருந்து மீள்விக்கப்பட்டது