உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எப். ஸ்கின்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பி. எப். ஸ்கின்னர்
ஹார்வேர்டு பல்கலைக் கழக உளவியல் துறையில் அண். 1950
பிறப்புபர்ராஸ் ஃபிரடெரிக் ஸ்கின்னர்
(1904-03-20)மார்ச்சு 20, 1904
Susquehanna, Pennsylvania
இறப்புஆகத்து 18, 1990(1990-08-18) (அகவை 86)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
தேசியம்அமெரிக்கர்
துறைஉளவியல், மொழியியல், மெய்யியல்
பணியிடங்கள்மின்னசொட்டா பல்கலைக்கழகம்
Indiana University
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்Hamilton College
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுOperant conditioning
Operant conditioning chamber
Radical behaviorism
தாக்கம் 
செலுத்தியோர்
சார்லஸ் டார்வின்
இவான் பாவ்லோவ்
Ernst Mach
Jacques Loeb
எட்வர்ட் லீ தார்ண்டைக்
William James
இழான் இழாக்கு உரூசோ
கென்றி டேவிட் தூரோ
விருதுகள்National Medal of Science (1968)
துணைவர்Yvonne (Eve) Blue (-after 1990)[1]
கையொப்பம்

பி. எப். ஸ்கின்னர் (B. F. Skinner, மார்ச் 20, 1904 – ஆகஸ்டு 18, 1990)), ஓர் அமெரிக்க உளவியலாளர், நடத்தையியல் கோட்பாட்டாளர்.

ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து 1939ஆம் ஆண்டு பெற்றார். ஸ்கின்னர் மின்னிசொட்டா மற்றும் இண்டியான பல்கலைக் கழகங்களிலும் பேரசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தனது வாழ்நாளில் கடைசி நாட்களில் கூட உளவியல் தொடர்பான செயல்பாடுகளில், எழுவதிலும் சொல்வதிலும் சொற்பொழிவிலும் ஈடுபட்டார். ஸ்கின்னர் தனது படைப்புகள் பற்றி இறப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு கூட சொற்பொழிவு ஆற்றிகொண்டிருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அமெரிக்க உளவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது.

வலுவூட்டலை செம்மைப்படுத்த வேண்டும் என்றால் தூண்டல் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பறைசாற்றினார். செயல்படுஆக்கநிலையுறுத்தல் கோட்பாட்டைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். நடத்தையியல் தொடர்புடைய கருத்துகளை அவர் தாம் எழுதிய இருபத்தொரு புத்தகங்களிலும் 180 சிறு கட்டுரைகளிலும் வெளியிட்டுள்ளார். சார்லஸ் டார்வின் மற்றும் ரூசொ கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். ஸ்கின்னருடைய கல்விக் கருத்தான செயல்படுஆக்கநிலையுறுத்தல் பரிசோதனைக்குப் பயன்படுத்திய பெட்டி, ஸ்கின்னர் பெட்டி என்ற பெயருடன் சிறப்பிக்கப்பட்டது.

மனித நடத்தைகள் தொடர்பான கருத்துகளை அறிவியல் கண்கொண்டு விளக்கினார். நடைமுறை வாழ்க்கையில் மனித இன நடத்தைக் கோட்பாட்டை விலங்குகளின் பரிசோதனைக்கொண்டு விளக்கினார். ஸ்கின்னரின் நடத்தைக் கோட்பாடு சிந்தனை மற்றும் மனவெழுச்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்கின்னரின் நடத்தை கோட்பாடு பற்றிய கருத்துகள் அவருடைய முதல் நூலான “விலங்குகளின் நடத்தை” என்ற நூலில் வெளியிடப்பட்டது. அந்நூலில் ஓர் உயிரின் நடத்தையைச் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்று விளக்கியுள்ளார். உயிரினங்களின் நடத்தையை மிகைப்படுத்தப்பட்ட வலுவூட்டல் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதையும் விளக்கினர். 1904ல் பிறந்த ஸ்கின்னர் 1990 வரை தன் வாழ்நாளின் பெரும் பகுதியை உளவியல் துறைக்கு அர்ப்பணித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sobel, Dava (August 20, 1990). "B. F. Skinner, the Champion Of Behaviorism, Is Dead at 86". The New York Times. https://www.nytimes.com/1990/08/20/obituaries/b-f-skinner-the-champion-of-behaviorism-is-dead-at-86.html. பார்த்த நாள்: August 30, 2015. 


1.துலங்கல் சார் ஆக்க நிலையிறுத்தம்

2.கல்விசார் ஆக்க நிலைநிறுத்தம்


எந்த தூண்டலும் உயிரிடத்தில் ஒரு குறிப்பிட்ட துலங்களை வெளிக்கொணரக் கூடிய ஆற்றலை பெற்று இருப்பதில்லை.

உயிரி தன்னிச்சையாக பல்வேறு துலங்களை வெளிப்படுத்தும்.

உதாரணம்: ஒரு எலி காரணம் ஏதும் இன்றியே தன் முகத்தை நாக்கால் நக்கி கொள்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எப்._ஸ்கின்னர்&oldid=3369624" இலிருந்து மீள்விக்கப்பட்டது