உள்ளடக்கத்துக்குச் செல்

பி. என். பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணிக்கரின் நினைவாக 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியாவின் அஞ்சல் தலை

புதுவாயில் நாராயண பணிக்கர் (Puthuvayil Narayana Panicker) (1 மார்ச் 1909-19 ஜூன் 1995) இந்திய மாநிலமான கேரளாவில் நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.[1] இவர் தொடங்கிய கேரள கிரந்தசாலா சங்கத்தின் செயல்பாடுகள் கேரளாவில் ஒரு பிரபலமான கலாச்சார இயக்கத்தைத் தூண்டின. இது 1990 களில் மாநிலத்தில் உலகளாவிய கல்வியறிவை உருவாக்கியது.

பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19, 1996 முதல் கேரளாவில் வாசிப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[2] கேரள கல்வித் துறையும் ஜூன் 19 முதல் 25 வரை ஒரு வாரத்திற்கு வாசிப்பு வாரம் அனுசரிக்கிறது [2]

2017 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் வாசிப்பு தினமான ஜூன் 19 ஐ இந்தியாவில் தேசிய வாசிப்பு தினமாக அறிவித்தார்.[2] அடுத்த மாதமான ஜூலை இந்தியாவில் தேசிய வாசிப்பு மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]
நீலம்பேரூரில் பி.என். பணிக்கரின் குழந்தைப் பருவ வீடு

பணிக்கர் 1909 மார்ச் 1 ஆம் தேதி கேரளாவின்நீலம்பேரூரில் கோவிந்த பிள்ளை மற்றும் ஜானகி அம்மா ஆகியோருக்கு மகனாக ஒரு நாயர் குடும்பத்தில் பிறந்தார்.[3] பணிக்கர் ஒரு ஆசிரியராகப் பணியாற்றினர். 1926 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் சனாதனதர்மம் நூலகத்தைத் தொடங்கினார்.[4]

பங்களிப்புகள்

[தொகு]

1945 ஆம் ஆண்டில் 47 கிராமப்புற நூலகங்களுடன் திருவிதாங்கூர் நூலக சங்கம் உருவாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ' படித்து வளருங்கள்' என்பதே அந்த அமைப்பின் முழக்கமாகும். பின்னர், 1956 இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்டவுடன், அது கேரள கிரந்தசால சங்கம் என ஆனது. வாசிப்பின் மதிப்பை அனைவரும் அறியும் வகையில் பணிக்கர் கேரளாவின் கிராமங்களுக்குச் சென்றார். இந்த வலையமைப்பிற்குள் சுமார் 6,000 நூலகங்களைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றார். 1975 இல் யுனெஸ்கோவின் 'கிருப்சகாய விருதை' கிரந்தசாலா சங்கம் வென்றது. 1977 ஆம் ஆண்டு மாநில அரசால் கையகப்படுத்தப்படும் வரை, பணிக்கர் 32 ஆண்டுகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.

பணிக்கர் 19 ஜூன் 1995 அன்று, 86 வயதில் இறந்தார்.[5] கேரள அரசு இவரது பங்களிப்புகளை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 19 ஆம் தேதியை வாசிப்பு நாள் என்று கொண்டாட உத்தரவிட்டது. கல்வியறிவு, கல்வி மற்றும் நூலக இயக்கத்திற்கான பணிக்கரின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்களில் ஒரு வார கால தொடர் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.

ஜூன் 21, 2004 அன்று அஞ்சல் துறை பணிக்கரை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swaroop, Vishnu (19 June 2019). "Reading awareness vehicle to visit govt schools, villages in Coimbatore district". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 2020-04-21.
  2. 2.0 2.1 2.2 2.3 "പി.എന്‍. പണിക്കര്‍; വായനയുടെ അണയാത്ത വഴിവിളക്ക് | PN Panicker Readers Day 2020". www.mathrubhumi.com (in Malayalam). 19 June 2020. Archived from the original on 19 June 2020. Retrieved 2 March 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "പി.എൻ. പണിക്കർ: ഒറ്റയ്ക്കൊരു സംഘം". ManoramaOnline. Retrieved 2019-04-24.
  4. വായനാദിനാചരണം നാളെ, മലയാള മനോരമ ജൂൺ 18, 2009
  5. "വായനയുടെ കുലപതിക്ക് ആദരപൂര്‍വ്വം". archive.is. 2013-06-24. Archived from the original on 2013-06-24. Retrieved 2019-04-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._பணிக்கர்&oldid=4338716" இலிருந்து மீள்விக்கப்பட்டது