பி. இலட்சுமண ரெட்டி
பி. இலட்சுமண ரெட்டி (P. Lakshmana Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். இலட்சுமண் ரெட்டி என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று பிறந்தார். ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேசம் பிரிவுக்குப் பிறகு முதல் ஆந்திரப் பிரதேச லோக் ஆயுக்தா எனப்படும் குறைகேள் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள சிம்மாத்ரிபுரம் தாலுகாவின் பைடிபாளத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் இவர் பிறந்தார். டிசம்பர் 1972 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கடப்பா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பின்னர் மாவட்ட நீதித்துறையில் நுழைந்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பதவியேற்றார். மே 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, M. Sagar (2019-09-09). "Justice P Lakshmana Reddy appointed Andhra Pradesh Lokayukta". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/amaravati/justice-p-lakshmana-reddy-appointed-andhra-pradesh-lokayukta/articleshow/71053493.cms.
- ↑ Staff Reporter (2019-09-15). "Justice Lakshman Reddy sworn in as Lokayukta" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/justice-lakshman-reddy-sworn-in-as-lokayukta/article29425975.ece.