பி. ஆர். பிரான்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி.ஆர். பிரான்சிசு
1957, 1960, 1970 மற்றும் 1977
பதவியில்
19 ஆண்டுகள்
முன்னவர் எம்.வி.ஆர்யன்
பின்வந்தவர் எ.எம்.பரமன், ராகவன் பொழாகாதேவில்
தொகுதி ஒல்லூர் சட்ட பேரவை
தனிநபர் தகவல்
பிறப்பு 3 டிசம்பர் 1924
ஒல்லூர், திருச்சூர், கேரளா
இறப்பு death-date and age
கொச்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) அச்சாயி பிரான்சிசு
பிள்ளைகள் 1 மகன் - ராய் 1 மகள்- மோலி 4 பேரக்குழந்தைகள் - பிராஞ்சிசு,யோசப்,, பிராஞ்சிசு,யோசு
இருப்பிடம் ஒல்லூர்
சமயம் கிருத்துவர்
ஏ.கே. அந்தோணி, சித்தார்த்தன் காட்டுங்கால் மற்றும் யோசு தனிக்கால் ஆகியோருடன்
கே. கருணாகரன் மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோருடன்
சுதந்திரப் போராட்ட வீர்ர் வி.ஆர். கிருட்டிணன் எழுதச்சனுடன்
இந்திய தொழிற் சங்க காங்கிரசு கட்சி மாவட்டத் தலைவர் எம் மாதவனுடன்

பி.ஆர்.பிரான்சிசு (P. R. Francis) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். திருச்சூரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். ஒல்லூர் சட்டமன்ற தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக 1957, 1960,1970,மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், திருச்சூர் மாவட்ட காங்கிரசு கட்சியின் செயற்குழுத் தலைவராகவும், இந்திய தேசியத் தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் திறன்மிக்க மாநிலத் தலைவர் மற்றும் துணைத் தலைவராகப் பணியாற்றினார். திருச்சூர் மற்றும் ஒல்லூர் தொகுதிகளில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் சார்பாக ஓடு தொழிலாளர்கள், தோட்ட்த் தொழிலாளர்கள் மற்றும் பாரம் தூக்கும் தொழிலார்கள் போன்ற பல்வேறு தொழில் வல்லுநர்கள் இவரிடம் இருந்தனர். சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பிரான்சிசு கலந்து கொண்டார்.[1][2]

பி.ஆர்.பிரான்சிசு அவர்களின் நினைவாக சிறந்த சமூகசேவை விருது பி.ஆர்.பிரான்சிசு சிமாரகா சமிதி என்ற அமைப்பு, பி.ஆர்.பிரான்சிசு அவர்களின் நினைவாக சிறந்த சமூகசேவை ஆற்றுபவர்களைக் கண்டறிந்து ஒவ்வோர் ஆண்டும் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது. ஒல்லூர் நகர அரங்கில் நினைவுப் பரிசாக ரூ. 11,111 தொகையும் மற்றும் ஒரு நினைவுப் பரிசும் அளிக்கப்படுகிறது. [3][4][5][6]

2002 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி இவர் காலமானார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

 • 2003: பி. பாலன்
 • 2004: ஆர்யாதான் முகமது மற்றும் ஏசுதாசன்]]
 • 2005:வி.எம்.சுதீரன்
 • 2006: கி. கார்த்திகேயன்
 • 2007: டாக்டர் பி.வி. கிருட்டிணன் நாயர்
 • 2008:
 • 2009: க.ம.மாணி
 • 2010: கே.சுதாகரன்
 • 2011: இரமேசு சென்னித்தல
 • 2012: கே.சி. வேணுகோபால்

மேற்கோள்கள்[தொகு]

 1. "P. R. Francis". Kerala Legislature. பார்த்த நாள் 2011-09-21.
 2. "List of MLA". Kerala Government. பார்த்த நாள் 2011-09-21.
 3. "Award for Karthikeyan". The Hindu. பார்த்த நாள் 2011-09-21.
 4. "P. R. Francis is dead". The Hindu. பார்த்த நாள் 2011-09-21.
 5. "Dr P V Krishnan Nair gets P R Francis Memorial Award". News Oneindia. பார்த்த நாள் 2011-09-21.
 6. "Karunakaran laments 'politics of neglect'". The Hindu. பார்த்த நாள் 2011-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._பிரான்சிசு&oldid=2760745" இருந்து மீள்விக்கப்பட்டது