பிஹரி மால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜா பிஹாரி மால் அல்லது பக்மால் என்பவர் 1491 ஜனவாி 27 ஆம் நாள் பிறந்தார். இவர் ராஜ்புட் கச்வாஹா என்ற பகுதியை ஆட்சி செய்தார். இப்பகுதி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியாகும். இவர் தன்னுடைய மகள் ஜோத்பாய் என்பவளை முகலாயப் பேரரசர் அக்பருக்கு மணம் முடித்து வைத்தார். ஜோத்பாய், ஹர்கபாய் மற்றும் ஹிரகுன்ஹா என்றும் அழைக்கப்பட்டார். ஜோத்பாய் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் தாயாவார். முகலாயருக்கு ராஜபுத்ர இளவரசியைத் திருமணம் செய்து கொடுத்த முதல் ராஜபுத்ர அரசர் ராஜா பிஹாரி மால் ஆவார். இவர் லாகூர் போரில் கொல்லப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஹரி_மால்&oldid=2378304" இருந்து மீள்விக்கப்பட்டது