பிஸ்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஸ்டியா என்பது ஒரு நீர்வாழ்க் களைச்செடியாகும். இதன் தாவரவியல் பெயர் பிஸ்டியா ஸ்ட்ரயோட்டஸ். இது நீர் முட்டைக்கோஸ், நீர் லெட்டூஸ், நைல் முட்டைக்கோஸ் என்றும் அழைக்கப்படுகிறது.இது முதலில் நைல் நதியில் காணப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் நீர்வழிப்பாதையில் பரவிக் காண்ப்படுகிறது.கிரேக்க வார்த்தையான 'பிஸ்டோஸ்', 'நீர்' என்ற பொருளுடையது.[1]

இது பல்லாண்டு ஒரு வித்திலைத் தாவரமாகும்.இதன் இலைகள் மென்மையாகவும், தடிமனாகவும் காணப்படும். இது நீரின் மேற்பரப்பில் மிதக்கும் செடியாகும்.இலைகலின் அடிப்பரப்பில் வேர்கள் தொங்கிக்கொண்டிருக்கும்.இலைகளுக்கு நடுவில் மலர்கள் மறைந்திருக்கும்.கருவுருதலுக்குப் பின் சிறு பச்சையான கனிகள் உற்பத்தியாகும்.பாலில்லா இனப்பெருக்கமும் இத்தாவரத்தில் காணப்படுகிறது.தாய்ச்செடிக்கும் அதன் கன்றுக்கும் இடையே ஓடுதண்டு காணப்படும். பிஸ்டியா ஒரு நன்னீர் வாழ்த்தாவரம்.நீரில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் காணப்பட்டால் இதன் வளர்ச்சி அதிகமாகக் காண்ப்படுகிறது.இச்சூழலில் பிராணவாயுவின் அளவு குறைந்து,மீன்கள் இறந்துபோக நேரிடுகிறது.பிஸ்டியா தாவரங்கள் நீரில் ஆடை போல படரும்போது, நீரில் மூழ்கியுள்ள மற்ற தாவரங்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.[ மேன்சோனியாஎன்ற பேரினத்தைச் சேர்ந்த கொசுக்கள்,பிஸ்டியா போன்ற தாவரங்களின் இலைகளின் அடிப்பரப்பில் முட்டைகளை இட்டு தங்கள் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்கின்றன.[4]

கட்டுப்பாடு[தொகு]

இது இயந்திர முறை மூலமாகவும், நீரில் பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லிகளைக் கொண்டும் கட்டுப்படுத்தப்படுகிறது.உயிரின முறையில் இரு பூச்சிகள் அதாவது நியூஹைட்ரோனோமஸ் அஃபினிஸ் என்ற தென் அமெரிக்கக் கூன்வண்டின் புழுக்களும்,வளர்ந்த பூச்சிகளும் மற்றும் ஸ்போடாப்டீரா பெக்டினிகார்னிஸ் என்ற அந்துப்பூச்சியின் புழுக்களும் இத்தாவரங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அமேஸான் வடிநிலங்களில் இது நன்னீர் ஆமைகளுக்கு உணவாகிறது.[5]

தாயகம்[தொகு]

இதன் தாயகம் ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[6]

பயன்கள்[தொகு]

இது வெப்பமண்டல மீன் காட்சியங்களில் சிறு மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.பாசிகள் படராதிருக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

1. Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names. Volume III: M-Q. CRC Press. p. 2084. ISBN 978-0-8493-2677-6.

2. Kasulo, V. 2000. The impact of invasive species in African lakes. In: The economics of biological invasions (eds. C. Perrings, M. Williamson and S. Dalmozzone). pp. 183–207. Cheltenham, UK: Edward Elgar.

3. Ramey, Victor (2001). "Water Lettuce (Pistia stratiotes)". Center for Aquatic and Invasive Plants, University of Florida. Retrieved 26 April 2010.

4. Park, K (2007). Parks Text Book of Preventive and Social Medicine (19th ed.). Jabalpur India.

5. Salo, Matti; Sirén, Anders; Kalliola, Risto (20 November 2013). Diagnosing Wild Species Harvest: Resource Use and Conservation. Academic Press. p. 115. ISBN 978-0-12-397755-7. Retrieved 27 January 2016.

6. “Pistia stratiotes” USGS Nonindigenous Aquatic Species Database, Gainesville, FL, and NOAA Great Lakes Aquatic Nonindigenous Species Information System, Ann Arbor, MI. <https://nas.er.usgs.gov/queries/greatlakes/FactSheet.aspx?SpeciesID=1099>Revision Date: 6/24/2016.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்டியா&oldid=3910846" இலிருந்து மீள்விக்கப்பட்டது