பிஷ்ணுபாதுகா (கோயில்)

ஆள்கூறுகள்: 26°49′24.73″N 87°14′52.53″E / 26.8235361°N 87.2479250°E / 26.8235361; 87.2479250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஷ்ணுபாதுகா (கோயில்)
கோயிலின் முக்கிய கட்டிடம்
பிஷ்ணுபாதுகா (கோயில்) is located in நேபாளம்
பிஷ்ணுபாதுகா (கோயில்)
நேபாளம்-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாநிலம்:நேபாள மாநில எண் 1
மாவட்டம்:சுன்சரி
அமைவு:தரண்
ஆள்கூறுகள்:26°49′24.73″N 87°14′52.53″E / 26.8235361°N 87.2479250°E / 26.8235361; 87.2479250
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:விமானம்

பிஷ்ணுபாதுகா (Bishnupaduka) விஷ்ணுபாதுகா எனவும் அழைக்கப்படும் இந்த கோயில், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இது நேபாளத்த்திலலுள்ள, தரனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது, புனித நதியான கொக்காஹா உருவான இடமாக கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

பழங்காலத்தில், இங்குள்ள உள்ளூர் மக்கள் இரண்டு தெளிவான கால்தடங்களைக் கொண்ட ஒரு பாறையைக் கண்டுபிடித்தனர். அது விஷ்ணுவின் கால்தடங்கள் என்று நம்பப்படுகிறது. எனவே மக்கள் ஒரு சிறிய கோவிலை கட்டி அதை பிஷ்ணுபாதுகா கோவில் என்று அழைத்தனர்.

புனித நூலான பிரம்ம புராணத்தின் நூற்றி பத்தாவது அத்தியாயத்தில் இந்த இடம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. விஷ்ணுவும் லக்ஷ்மியும் அர்ஷா மற்றும் பிற தெய்வீக மூதாதையர்களின் சிராத்தத்தை (இறந்த மூதாதையர்களை நினைவுகூரும் புனித சடங்குகள்) அனுசரித்தனர் என்று தெளிவாகக் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இந்துக்கள், குறிப்பாக தை மாதத்தில் தங்கள் முன்னோர்களின் சிராத்தத்திற்காக இங்கு கூடுகிறார்கள்.

காத்மாண்டுவின் கோகர்ணா, ரசுவாவின் பெத்ராவதி மற்றும் தரனின் பிஷ்ணுபாதுகா ஆகியவை சிராத்தம் செய்ய வேண்டிய முக்கிய புனிதத் தலங்கள் என்று கருதப்படுகிறது. [1]

இந்த ஆலயம் இந்தியாவின் கயையை விட பழமையானது மற்றும் புனிதமானது என்று முன்னோர்கள் (இறந்தவர்) ஏற்றுக்கொண்டதாக வரலாறு காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ணுபாதுகா_(கோயில்)&oldid=3649023" இருந்து மீள்விக்கப்பட்டது