உள்ளடக்கத்துக்குச் செல்

பிஷாகா தத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஷாகா தத்தா (Bishakha Datta) ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும், சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பத்திரிகையாளரும் ஆவார்.[1] இவர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பாயிண்ட் ஆஃப் வியூவின் இணை நிறுவனரும் நிருவாக இயக்குநரும் ஆவார். இந்த நிறுவனம் பாலினம், பாலியல், பெண்கள் உரிமைகள் துறையில் பணிபுரியும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.[2] இவர் விக்கிமீடியா அறக்கட்டளை (2010–2014) உள்ளிட்ட இலாப நோக்கற்ற அமைப்புகளின் குழுவிலும் பணியாற்றியுள்ளார். விக்கிமீடியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் பணியாற்றிய முதல் இந்தியர் ஆவார்.[3]

பணிகள்

[தொகு]

1998ஆம் ஆண்டில், இந்தியாவின் மகாராட்டிராவில் உருவாக்கப்பட்ட அனைத்து பெண் அரசியல் பஞ்சாயத்துகளின் கண்ணோட்டமான "அண்ட் ஹூ வில் மேக் தி சப்பாத்திஸ்?"[4]என்ற நூலினைத் தத்தா தொகுத்துள்ளார்.

2003ஆம் ஆண்டில், இவரது ஆவணப்படமான "இன் தி ஃபிளெஷ்: த்ரீ லைவ்ஸ் இன் ப்ரொஸ்டிரிசிட்டி" வெளியிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷாகா_தத்தா&oldid=4324220" இலிருந்து மீள்விக்கப்பட்டது