பிழைகளைதல் (விலங்கியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிழைகளைதல் (Emendation) என்பது விலங்கியல் பெயரிடலில், உயிரின வகைக் குழுவின் பெயர்களின் எழுத்துப்பிழையில் செய்யப்படும் மாற்றங்களைக் குறிப்பதாகும். பாக்டீரியாவில் பெயரிடலில், பிழைகளைதல் என்பது சுற்றறிக்கை வாயிலாகத் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.[1]

விலங்கியல்[தொகு]

வகைப்பாட்டியல் பெயரினை விவரிக்கும் போது உயிரின வகைக் குழுவின் ஆசிரியரால் முதலில் பயன்படுத்தப்பட்ட பெயர்களின் எழுத்துப்பிழையை மாற்றுவதற்கான நியாயமான காரணத்துடன் மாற்றம் உணர்வுபூர்வமாக செய்யப்பட வேண்டும். ஆனால் வேறு எந்த எழுத்து மாற்றங்களும் நியாயமற்றதாகக் கருதப்படுகிறது. செல்லுபடியாகும் திருத்தங்கள் திருத்தத்திற்கான மாற்றங்களாக கருதப்படுபவற்றில் சில:[2][3]

  • வகைப்பாட்டியலில் பெயர்களை விவரிக்கும் அசல் படைப்பில் காணப்படும் அச்சுப் பிழைகள்
  • இலத்தீன் அல்லாத வார்த்தை எழுத்துப்பெயர்ப்பு பிழைகள்
  • டைக்ரிடிக்ஸ் அல்லது இடைக்கோடு இடல்உள்ளடக்கிய பெயர்கள்;
  • பொதுவான பெயரின் பாலினத்துடன் பொருந்தக்கூடிய சிற்றினங்களின் பெயர் முடிவுகளின் சேர்க்கை மாற்றப்பட்டிருக்கும் போது.

இருசொற் பெயரீடலின் ஆசிரியரின் பெயர் மாறாமல் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lapage, S.; Sneath, P.; Lessel, E.; Skerman, V., eds. (1992), International Code of Nomenclature of Bacteria: Bacteriological Code (1990 revision ed.), Washington, DC: ASM Press, Rule 35
  2. Follett, W.I (1952). "Emendation of Zoological Names". Systematic Biology 1 (4): 178–181. doi:10.1093/sysbio/1.4.178. 
  3. "Article 32 of the ICZN". ICZN.