பிள்ளைத்தக்காளி
Jump to navigation
Jump to search
Cape gooseberry | |
---|---|
![]() | |
Cape gooseberry flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Solanales |
குடும்பம்: | உருளைக் கிழங்கு குடும்பம் |
பேரினம்: | Physalis |
இனம்: | P. peruviana |
இருசொற் பெயரீடு | |
Physalis peruviana L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பிள்ளைத்தக்காளி (Physalis peruviana) என்பது ஒரு தாவரமாகும். இதன் தாயகம் பெரு ஆகும். இதன் தாவரப் பெயர் பைசாலிஸ் பெருவியானா என்பதாகும். இது தமிழகத்திள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் நன்கு விளைகிறது. இச்செடி 45 முதல் 90 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இப்பழத்திலிருந்து பழக்கூட்டு செய்யலாம். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பழங்கள் சனவரி - மே மாதங்களில் கிடைக்கும். ஒரு எக்டரில் 20,000 கிலோ பழங்கள் கிடைக்கும்.
சத்துகள்[தொகு]
நூறு கிராம் பழத்தில் உள்ள சத்துகள் (கிரமில்)
- புரதம் 1.8
- கொழுப்பு 0.2
- நார்ப்பொருள் 3.2
- மாவுப் பொருள் 11.1
- கால்சியம் 0.01
- பாஸ்பரஸ் 0.067
- இரும்பு 0.002
மருத்துவப் பண்புகள்[தொகு]
இப்பழம் சிறுநீரைப் பெருக்கும். இச்செடியின் இலையை நெருப்பனலில் வாட்டி வீக்கத்தின்மீது போட வீக்கம் கரைந்து குணமாகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் 14 December 2014.
- ↑ அர்ச்சுணன் (செப்டம்பர் 2008). மருத்துவத்தில் காய்கனிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், அம்பத்தூர். பக். 57,58.