பிளையிங் பிஷ் கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியேற்றம்

பிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove) என்பது ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கிறிஸ்துமசு தீவுகளின் முதன்மைக் குடியேற்றம் ஆகும். பிளையிங் பிஷ் எனும் பிரித்தானிய ஆய்வுக் கப்பலின் பெயரை அடுத்தே இக்குடியேற்றத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. கிறிஸ்துமசு தீவுகளில் பிரித்தானியரால் அமைக்கப்பட்ட முதலாவது குடியேற்றம் இதுவேயாகும். இக்குடியேற்றம் 1888 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குடியேற்றத்தில் 1600 மக்கள் வசிக்கின்றனர். பல உலக வரைபடங்களிலும் இக்குடியேற்றமானது குடியேற்றம் (The Settlement) எனவே பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றது.[1] கிறிஸ்துமசு தீவுகளின் வட கிழக்குக் கரையில் இத்தீவு அமைந்துள்ளது. இங்கு சிறு துறைமுகம் ஒன்று உள்ளது. அத்துறைமுகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறுபடகுகள் தரிக்கப்பட்டுள்ளன. இக்குடியேற்றத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் நீர் மூழ்குதல் விளையாட்டுக்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடுகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Christmas Island settlement [electronic resource] / produced by the Royal Australian Survey Corps under the direction of the Chief of the General Staff. Ed. 2-AAS. Canberra : Royal Australian Survey Corps, 1983. Scale 1:10 000 transverse Mercator proj. “Series R911”
  2. Western Mail (Perth, WA : 1885 - 1954). 19 January 1917. See page 24, article and photo
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளையிங்_பிஷ்_கோவ்&oldid=3834524" இலிருந்து மீள்விக்கப்பட்டது