பிளைத் கொண்டைக் கழுகு
பிளைத் கொண்டைக் கழுகு | |
---|---|
சிங்கப்பூர் ஜூரோங் பறவைகள் பூங்காvஇல் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நிசேட்டசு
|
இனம்: | நி அல்போனிஜெர்
|
இருசொற் பெயரீடு | |
நிசேட்டசு அல்போனிஜெர் பிளைத், 1845 | |
வேறு பெயர்கள் | |
பைசேயடசு அல்போனிஜெர் |
பிளைத் கொண்டைக் கழுகு (Blyth's hawk-eagle-நிசேட்டசு அல்போனிஜெர்) என்பது நடுத்தர அளவிலான கொன்றுண்ணி பறவைச் சிற்றினம் ஆகும். இது முன்னர் இசுபைசேடசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டது.[2] மற்ற கழுகுகளைப் போலவே, இது அசிபிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
வாழிடம்
[தொகு]இது மலாய் தீபகற்பம், சிங்கப்பூர், சுமாத்திரா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது.[3] இது திறந்தவெளிகளில் காணப்படும் வனப்பறவை. இருப்பினும் தீவுகளில் காணப்படும் பறவைகள் அதிக மர அடர்த்தியை விரும்புகின்றன. இது மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி, முட்டையிடுகிறது. ஒரு தடவை ஒரே ஒரு முட்டையினை மட்டுமே இடும்.
விளக்கம்
[தொகு]இது சுமார் 50-60 செ.மீ. உடல் நீளமுடைய மிகவும் சிறிய கழுகு ஆகும். முதிர்வடைந்த பறவையின் வாலின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில் வெள்ளை நிறப் பட்டை காணப்படும். கருப்பு நிறமுடைய இப்பறவையின் மார்பில் கருப்பு புள்ளிகள் காணப்படும். இது தனித்துவமான கொண்டை ஒன்றைக் கொண்டுள்ளது. இளம் பறவைகள் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளன. மேலும் வெளிர் பழுப்பு தலை மற்றும் கீழ்ப் பகுதிகளைக் கொண்டுள்ளன.
இங்கிலாந்து விலங்கியல் நிபுணரும் வங்காள ஆசியச் சங்கத்தின் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளருமான எட்வர்ட் பிளைத்தினை நினைவுகூரும் வகையில் இதற்குப் பொதுவான பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Nisaetus alboniger". IUCN Red List of Threatened Species 2016: e.T22696159A93547439. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22696159A93547439.en. https://www.iucnredlist.org/species/22696159/93547439. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Helbig, AJ; Kocum, A; Seibold, I; Braun, MJ (2005). "A multi-gene phylogeny of aquiline eagles (Aves: Accipitriformes) reveals extensive paraphyly at the genus level". Molecular Phylogenetics and Evolution 35 (1): 147–164. doi:10.1016/j.ympev.2004.10.003. பப்மெட்:15737588. https://repository.si.edu/bitstream/handle/10088/6276/2005B_Helbig_et_al.pdf?sequence=1&isAllowed=y.
- ↑ "Blyth's Hawk-eagle (Spizaetus alboniger)". IBC. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.