பிளைத்தின் அரசவால் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளைத்தின் அரசவால் ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மோனார்க்கிடே
பேரினம்:
தெர்ப்சிபோன்
இனம்:
தெ. அபினிசு
இருசொற் பெயரீடு
தெர்ப்சிபோன் அபினிசு
(பிளைத், 1846)
கிளையினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்

தெசித்ரே அபினிசு

பிளைத்தின் அரசவால் ஈப்பிடிப்பான் (Blyth's paradise flycatcher)(தெர்ப்சிபோன் அபினிசு), ஓரியண்டல் அரசவால் ஈப்பிடிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இது மொனார்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினம் ஆகும். இது தெற்கு சீனாவிலிருந்து சுமத்ரா மற்றும் மெலனேசியா வரை காணப்படுகிறது. இது 2015-ல் பன்னாட்டு பறவையியல் சங்கத்தினால் தனி சிற்றினமாகக் கருதப்படும் வரை ஆசிய அரசவால் ஈப்பிடிப்பான் எனக் கருதப்பட்டது.[2]

துணையினங்கள்[தொகு]

பத்து துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[3]

  • தெ. அ. சாதுரேதியர் - (சாலோமான்சன், 1933) : நேபாளத்தின் கிழக்குப் பகுதிகளிலும் வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மரில் இனப்பெருக்கம் செய்கின்றன; மலேசியாவில் வாழும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன.[4]
  • தெ. அ. நிகோபாரிகா - ஓட்சு, 1890 : முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது
  • தெ. அ. பர்மே - (சாலோமான்சன், 1933) : மத்திய மியான்மரில் காணப்படுகிறது
  • தெ. அ. இந்தோசைனென்சிசு - (சாலோமான்சன், 1933) : கிழக்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனா முதல் இந்தோசீனா வரை காணப்படுகிறது
  • தெ. அ. அபினிசு - (பிளைத், 1846) : மலாய் தீபகற்பம் மற்றும் சுமாத்திராவில் கண்டுபிடிக்கப்பட்டது
  • தெ. அ. புரோசெரா - (ரிச்மண்ட், 1903): முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. சிமியுலுவில் (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்படுகிறது
  • தெ. அ. இன்சுலாரிசு - சால்வடோரி, 1887 : முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. நியாஸில் தீவு (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்படுகிறது
  • தெ. அ. போர்னிசிசு - (ஹார்டர்ட், 1916) : போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது
  • தெ. அ. சம்பேனியன்சு.- மேயர், ஏபி, 1894 : முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. சும்பா தீவுகள் (தெற்கு சிறு சுண்டாத் தீவுகள்)

சும்பாவா, அலோர், லெம்பாட்டா மற்றும் புளோரெஸ் (மத்திய சிறு சுண்டாத் தீவுகள்) ஆகியவற்றில் காணப்படும் தெங்காரா அரசவால் ஈப்பிடிப்பான் (தெ. புளோரிசு), முன்பு ஒரு கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் தனிச்சிற்றினமாக மறுவகைப்படுத்தப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Terpsiphone affinis". IUCN Red List of Threatened Species 2017: e.T103716095A119718749. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T103716095A119718749.en. https://www.iucnredlist.org/species/103716095/119718749. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "IOC World Bird List 5.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.5.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  3. "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  4. Rasmussen, P.C.; Anderton, J.C. (2005). Birds of South Asia: The Ripley Guide. Vol.2. Smithsonian Institution and Lynx Edicions. பக். 332–333. 
  5. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.