பிளேக் நியமன வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானோ வரைபடம் of AB + BC + AC, a sum of all prime implicants (each rendered in a different color). Deleting AC results in a minimal sum.

பூலியன் இயற்கணிதத்தில், பூலியன் சாா்பு f இன் சூத்திரம் பிளாக் நியமன வடிவத்தில் உள்ளது எனில் அது f இல் உள்ள எல்லா  பிரதான உட்குறிப்புக்களின்(அடுக்குகளின்) பிரிப்பிணைவு   (BCF) ஆகும். இது பிரதான உட்குறிப்புகளின் முழுமையான தொகுப்பு எனவும்,[1] முழுமையான தொகுப்பு எனவும்,[2] பிரிப்பிணைவு பிரதான வடிவம் எனவும் ,[3] அழைக்கப்படுகிறது. பிளாக் நியமன வடிவம் பிரிப்பிணைவு இயல் வடிவம் ஆகும்.

எல்லாஉறுப்புகளின்  சிறும மதிப்புகளின் கூடுதல் பிளேக் நியமன வடிவத்தில் இருப்பினும்,  பிளேக் நியமன வடிவம் சிறுமமாக இருக்க வேண்டியதில்லை.[2]

1937 இல் ஆா்ச் பிளேக் என்பவா்  இதை அறிமுகப்படுத்தினாா். இவா் இதை "எளிமையாக்கப்பட்ட நியமன வடிவம்" என அழைத்தாா். 1990 இல் பிளேக்கிற்கு மாியாதை செலுத்தும் வகையில் பிராங்க் மாா்கம் பிரெளனால் இப்பெயாிடப்பட்டது.

பிளேக் உட்குறிப்புகளை வெளியேற்றுதல், தொடா்ச்சியான கருத்து இணக்கம் மற்றும் பெருக்கல் என்ற மூன்று முறைகளும் நியமன வடிவத்தை கணக்கிட பயன்படும் என விவாதித்தாா். தொடா்ச்சியான கருத்து இணக்கம் முறை சாம்ஸன் மற்றும் மில்ஸ், குயின் மற்றும் பிங் ஆகியோா்களால் மீள கண்டுபிடிக்கப்பட்டடது.

மேலும் காண்க[தொகு]

  • Horn clause
  • Consensus theorem

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ternary Decision Diagrams and their Applications". Representations of Discrete Functions. 1996. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0792397207. https://archive.org/details/representationso0000unse_w7d2. 
  2. 2.0 2.1 Foundations of Digital Logic Design. பக். 177. 
  3. Donald E. Knuth, The Art of Computer Programming 4A: Combinatorial Algorithms, Part 1, 2011, p. 54
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேக்_நியமன_வடிவம்&oldid=3581149" இலிருந்து மீள்விக்கப்பட்டது