பிளியோசிமேட்டா
பிளியோசிமேட்டா புதைப்படிவ காலம்: | |
---|---|
![]() | |
Ovigerous female Potamon fluviatile with the pleon held open to show the eggs held on the pleopods | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஇசுடிரிக்கா
|
வரிசை: | |
துணைவரிசை: | பிளியோசிமேட்டா
|
மீப்பெரும் வரிசை | |
|
பிளியோசிமேட்டா (Pleocyemata) என்பது 1963ஆம் ஆண்டில் மார்ட்டின் பர்கன்ரோட் என்பவரால் உருவாக்கப்பட்ட பத்துக்காலிகள் ஓட்டுமீன்களின் துணை வரிசை ஆகும்.[1] பர்க்கன்ரோடின் வகைப்பாடு முந்தைய துணை வரிசைகளான நெட்டான்சியா மற்றும் ரெப்டான்சியா ஒற்றை மரபு வழிக் குழுக்களாக டென்ட்ரோபிரான்சியாட்டா (இறால்) மற்றும் பிளியோசைமேட்டாவினைக் கொண்டது. பிளியோசிமேட்டாவில் ரெப்டாண்டியாவின் அனைத்துச் சிற்றினங்களும் அடங்கும் (நண்டு, சிங்கி இறால், கிரேபிஷ் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது). இதனுடன் இசுடெனோபோடைடியா (இதில் "குத்துச்சண்டை இறால்" அல்லது "முடிதிருத்தும்-துருவ இறால்" என்று அழைக்கப்படும்) மற்றும் உண்மையான இறால்களைக் கொண்ட கரிடியா ஆகியவை உள்ளன.
உடற்கூறியல்
[தொகு]பிளியோசிமேட்டாவின் அனைத்துச் சிற்றினங்களும் பல சிறப்பம்சங்களால் ஒன்றிணைக்கப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது- கருவுற்ற முட்டைகள் பெண்ணால் அடைகாக்கப்படுவதாகும். மேலும் சூயியா எனும் இளம் உயிர்கள் பொறிப்பதற்குத் தயாராக இருக்கும் வரை இவற்றின் வயிற்றின் அடிப்பகுதிகளில் நீந்துக் கால்களுக்கிடையே ஒட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் பண்பு இக்குழுவிற்கு இப்பெயரைக் கொடுக்கிறது. டென்ட்ரோபிராங்கியாட்டாவில் காணப்படும் அனைத்து உயிரிக் கிளைகளுக்கும் மாறாக பிளியோசிமேட்டாவில் ஓர் ஏடானா செவுள் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
வகைப்பாட்டியல்
[தொகு]கீழேயுள்ள கிளை வரைபடம், வூல்ப் மற்றும் பலரின் (2019) பகுப்பாய்விலிருந்து, பெரிய வரிசையில் டென்ட்ரோபிராங்கியாட்டாவினப் பல சகோதரக் குழுக்களாகக் காட்டுகிறது.[2]
பிளியோசிமேட்டா பின்வரும் மீப்பெரும் வரிசைகளைக் கொண்டுள்ளது.[3]
பத்துக்காலிகள் |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
- இசுடெனோபோடைடியா (இசுடெனோபோடைடியா இறால்)
- கரிடியா (கரிடியா இறால்)
- புரோகேரிடிடே
- அசெலாட்டா (முள், காலணி, எரிச்சல் சிங்கி இறால்)
- பாலிசெலிடா (கடலடிவாழ் ஓட்டுடலி)
- கிளைபீடியா (கிளைபியோய்டு சிங்கி இறால்)
- அசுடாசிடியா (நண்டு, பவளப்பாறை, நண்டு, கிரேபிஷ்)
- அக்சிடியா (மண் சிங்கி இறால், பேய் இறால்)
- ஜெபிடியா (சேற்றுச் சிங்கி இறால், சேற்று நண்டு)
- அனோமுரா (துறவி நண்டு, சிங்கி இறால்)
- பிராக்கியூரா (நண்டு)
மிகப் பழமையான புதைபடிவப் பேரினமாக டெவோனியக் காலத்தினைச் சார்ந்த பாலியோபாலேமன் உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burkenroad, M. D. (1963). "The evolution of the Eucarida (Crustacea, Eumalacostraca), in relation to the fossil record". Tulane Studies in Geology 2 (1): 1–17.
- ↑ Wolfe, Joanna M.; Breinholt, Jesse W.; Crandall, Keith A.; Lemmon, Alan R.; Lemmon, Emily Moriarty; Timm, Laura E.; Siddall, Mark E.; Bracken-Grissom, Heather D. (24 April 2019). "A phylogenomic framework, evolutionary timeline and genomic resources for comparative studies of decapod crustaceans". Proceedings of the Royal Society B 286 (1901). doi:10.1098/rspb.2019.0079. பப்மெட்:31014217. பப்மெட் சென்ட்ரல்:6501934. https://royalsocietypublishing.org/doi/10.1098/rspb.2019.0079.
- ↑ Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf.
- ↑ Robert P. D. Crean (November 14, 2004). "Order Decapoda: Fossil record and evolution". University of Bristol. Archived from the original on February 29, 2012. Retrieved January 2, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்களில் பிளியோசிமேட்டா பற்றிய தரவுகள்