பிளிப்கார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளிப்கார்ட்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை2007
தலைமையகம்பெங்களூர், இந்தியா
முக்கிய நபர்கள்சச்சின் பன்சால் (சீ. இ. ஓ), பின்னி பன்சால் (சீ. ஓ. ஓ)
தொழில்துறைஇணைய வணிகம்
வருமானம்Green Arrow Up Darker.svg 60.8 பில்லியன் (US$800 மில்லியன்) (FY 2013-14)[1]
பணியாளர்30,000 (2016)[2]
இணையத்தளம்www.flipkart.com

பிளிப்கார்ட் (Flipkart) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும். இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரியதாகும்.[3][4][5]

வரலாறு[தொகு]

பிளிப்கார்ட் அக்டோபர் 2007 இல் சச்சின் பன்சால், பின்னி பன்சால் என்னும் இரு இளம் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டது. நிறுவனர்கள் இருவரும் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் படித்து பின்னர் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். துவக்கத்தில் செவி வழிச் செய்தி மற்றும் டிவிட்டர், ஃபேஸ்புக் இணையதளங்களின் மூலமாகவே தங்கள் கடையினைப் பிரபலப்படுத்தினர். பிளிப்கார்ட் மார்ச் 2008 ஆம் அண்டு முதல் லாபத்தில் இயங்கத் துவங்கியது. துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு காலாண்டும் நூறு சதவிகித வளர்ச்சி கண்டிருப்பதாக நிறுவனத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்று வந்த பிளிப்கார்ட், 2010 முதல் குறுவட்டு, டிவிடி, நகர்பேசி, மற்ற மின்னணு சாதனைகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. 2009-10 இற்கான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ. 20 கோடியாக இருந்தது. பிளிப்கார்ட்டின் நிறுவனர்கள் முதலில் சொந்தப் பணத்தைத் தான் முதலீடாகப் பயன்படுத்தினர். பின்னர் ஆக்சல் இந்தியா, டைகர் குளோபல் மேனேஜ்மன்ட் போன்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தன. 2016 இல் பிளிப்கார்டில் 30,000 பேர் வேலை செய்கின்றனர்.[3][4][6][7][8][9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Flipkart sales run rate hits $1 billion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Bangalore). 6 March 2014. http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Flipkart-sales-run-rate-hits-1-billion/articleshow/31553233.cms. பார்த்த நாள்: 1 August 2014. 
 2. "Flipkart to sack 800 more amidst gloomy biz outlook". The Hindu. 9 September 2016.
 3. 3.0 3.1 "Cash on delivery". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 19 July 2010. http://www.business-standard.com/india/news/cashdelivery/401747/. பார்த்த நாள்: 19 August 2010. 
 4. 4.0 4.1 "Flipkart: Country’s largest online bookstore". தி எகனாமிக் டைம்ஸ். 30 June 2010. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/et-cetera/Flipkart-Countrys-largest-online-bookstore/articleshow/6108317.cms. பார்த்த நாள்: 19 August 2010. 
 5. "Bibliofile:A Garage Takes Off". Outlook. 22 March 2010. http://www.outlookindia.com/article.aspx?264649. பார்த்த நாள்: 19 August 2010. 
 6. Dua, Aarti (28 February 2010). "A winning chapter". தி டெலிகிராஃப். Archived from the original on 9 ஜூன் 2010. https://web.archive.org/web/20100609140909/http://www.telegraphindia.com/1100228/jsp/graphiti/story_12157168.jsp. பார்த்த நாள்: 19 August 2010. 
 7. "A Tale of Two Book Fairs". தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ். 07 February 2010. Archived from the original on 10 பிப்ரவரி 2010. https://web.archive.org/web/20100210074956/http://www.financialexpress.com/news/a-tale-of-two-book-fairs/576523/3. பார்த்த நாள்: 19 August 2010. 
 8. "Flipkart eyes Rs 100 cr revenue". பிசினஸ் லைன். 07 February 2010. Archived from the original on 30 ஜூன் 2013. https://archive.today/20130630101616/http://www.thehindubusinessline.in/bline/blnus/02071620.htm. பார்த்த நாள்: 19 August 2010. 
 9. "Inlogistics: India's first private train cargo operator". CNBC-TV18. 18 March 2010. http://www.moneycontrol.com/news/business/inlogistics-indias-first-private-train-cargo-operator_447560.html. பார்த்த நாள்: 19 August 2010. 
 10. "Flipkart Raises Up To $10M From Tiger Global". VC Circle. 15 June 2010. Archived from the original on 18 ஜூன் 2010. https://web.archive.org/web/20100618052625/http://www.vccircle.com/500/news/flipkart-raises-up-to-10m-from-tiger-global. பார்த்த நாள்: 19 August 2010. 
 11. "Now order your next mobile on Flipkart". மின்ட். 4 August 2010. http://www.livemint.com/2010/08/04170204/Now-order-your-next-mobile-on.html. பார்த்த நாள்: 19 August 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளிப்கார்ட்&oldid=3671771" இருந்து மீள்விக்கப்பட்டது