பிளான்போர்டு பழந்தின்னி வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெரோபோடிடே
பேரினம்:
இசுபேரியசு

மில்லர், 1906
இனம்:
பிளான்போர்டி
இருசொற் பெயரீடு
இசுபேரியசு பிளான்போர்டி
தாமசு, 1847
பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் பரம்பல்
வேறு பெயர்கள்
  • சைனாப்பிடிரசு பிளான்போர்டி தாமசு, 1891

பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் (Blanford's fruit bat)(இசுபேரியசு பிளான்போர்டி) என்பது மலைப்பகுதியில் காணப்படும் பெரும் வெளவால் சிற்றினம் ஆகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் காணப்படுகிறது.

வகைபாட்டியல்[தொகு]

பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் குறித்து இங்கிலாந்து விலங்கியல் அறிஞர் ஓல்ட்பீல்டு தாமசு 1891-ல் புதிய சிற்றினமாக விவரித்தார். இவர் இதனை சையனாப்பிடரசு பேரினத்தில் சேர்த்தார்.[2] பிளான்போர்டு என்ற இதன் குறிப்பிட்ட அடைமொழியானது இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் தாமசு பிளான்போர்டின் பெயராகும்.[3]

1906ஆம் ஆண்டில், அமெரிக்க விலங்கியல் நிபுணர் கெரிட் சுமித் மில்லர் இசுபேரியசு என்ற புதிய பேரினத்தை முன்மொழிந்தார். இப்பேரினத்தின் கீழ் சையனாப்பிடரசு பிளான்போர்டியின் பண்புகளான கால்கர் மற்றும் வெட்டுப்பல் தனித்துவ வளர்ச்சியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டது.[4]

வரம்பும் வாழிடமும்[தொகு]

பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் பல நாடுகளில் இது காணப்படுகிறது.[1] 2010இல், பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் முதல் முறையாக லாவோஸில் ஆவணப்படுத்தப்பட்டது.[5] இது கடல் மட்டத்திற்கு 308–2,710 மீ (1,010–8,891 அடி) மேல் காணப்படும்.[1]

பாதுகாப்பு[தொகு]

2008-ல், பிளான்போர்டு பழந்தின்னி வெளவால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டது. இதன் புவியியல் வரம்பு மற்றும் மறைமுகமாக அதிக எண்ணிக்கை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது.[1] மேலும் எவ்வித பெரிய அச்சுறுத்தல்களையும் பட்டியலிடவில்லை.[1] ஆனால் லாவோஸில் இதன் முதல் பதிவு சந்தை ஒன்றில் மாமிசமாக விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Bates, P.; Bumrungsri, S.; Csorba, G.; Francis, C. (2008). "Sphaerias blanfordi". IUCN Red List of Threatened Species 2008: e.T20521A9210732. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T20521A9210732.en. https://www.iucnredlist.org/species/20521/9210732. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Thomas, O. (1891). "Diagnoses of three new Mammals collected by Signor L. Fea in the Carin Hills, Burma". Annali del Museo Civico di Storia Naturale di Genova: 884. https://biodiversitylibrary.org/page/30150395. 
  3. Srinivasulu, C (2019). South Asian mammals: an updated checklist and their scientific names. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-429-88089-6. https://books.google.com/books?id=djduDwAAQBAJ&pg=PT111. பார்த்த நாள்: 2019-08-30. 
  4. Miller, G.S. (1906). "Twelve new genera of bats". Proceedings of the Biological Society of Washington 19: 83–85. https://biodiversitylibrary.org/page/2348065. 
  5. 5.0 5.1 Douangboubpha, B.; Sanamxay, D.; Xayaphet, V.; Bumrungsri, S.; Bates, P. J. (2012). "First record of Sphaerias blanfordi (Chiroptera: Pteropodidae) from Lao PDR". Tropical Natural History 12 (1): 117–122.