பிளாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவற்றில் ஆண், பெண் போன்றவற்றின் தோற்றம்


பிளாட்டி மீன் (Platy (fish)) இவை நன்னீரில் வாழும் மீன் வகையாகும். இவை அசையும் வாலமைப்பைப் பெற்றுள்ளது. இவற்றின் வாய்ப்பகுதியும், வால்ப்பகுதியும் கருப்பு நிறம் கொண்டதாகவும், உடல் பகுதி மஞ்சள் நிறம் கொண்டதாகவும் காணப்படுகிறது. இம்மீன்கள் அனைத்துண்ணி வகையைச் சார்ந்ததாகும். இதன் குடும்பப்பெயர் பொசிலிடிஎ (Poeciliidae) என்பதாகும். இவற்றின் பூர்வீகம் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதி மற்றும் மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியும் ஆகும். [1][2] இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன அவை தெற்கு பிளாட்டி மீன் மற்றும் பல நிற பிளாட்டி மீன் என்பனவாகும். இவை இரண்டும் இனக்கலப்பின் மூலம் ஒரே தோற்றம் கொண்டவையாக காட்சி அளிக்கிறது. தொட்டியில் வளர்க்கப்படும் இவ்வகையான மீன்கள் பொதுவாக கலப்பினம் கொண்டவையாகவே இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Platy, Platies - Xiphophorus maculatus". FishLore.com. பார்த்த நாள் 2010-07-24.
  2. "Platies - Moonfish, Variegated Platy, Variatus Platy". Animal-World. பார்த்த நாள் 2010-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டி&oldid=2246199" இருந்து மீள்விக்கப்பட்டது