பிளாட்டன்
பிளாட்டன் | |
|---|---|
சுவிட்சர்லாந்தின் மாநகராட்சி | |
| ஆள்கூறுகள்: 46°25′N 7°49′E / 46.417°N 7.817°E | |
| நாடு | சுவிட்சர்லாந்து |
| கன்டோன் | Valais |
| மாவட்டம் | Westlich Raron |
| அரசு | |
| • நகரத்தந்தை | Matthias Bellwald[1] |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 90.63 km2 (34.99 sq mi) |
| ஏற்றம் | 1,542 m (5,059 ft) |
| மக்கள்தொகை (2018-12-31)[3] | |
| • மொத்தம் | 290 |
| • அடர்த்தி | 3.2/km2 (8.3/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
| அஞ்சல் குறியீடு(கள்) | 3919 |
| SFOS இல. | 6192 |
| இணையதளம் | blatten-vs SFSO statistics |
பிளாட்டன் (Blatten) என்பது ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் வாலைசு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கான லோட்செண்டலில் உள்ள ஒரு கிராமமும் நகராட்சியுமாகும். 2025 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒரு பேரழிவு பணிப்பாறை நிலச்சரிவால் இக்கிராமம் பெருமளவில் அழிந்தது. [4][5] பிளாட்டன் கிராமம் வெசுட்லிச்சு ராரோன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இக்கிராமத்தின் பெரும்பகுதி யுனெசுகோ உலகப் பாரம்பரிய தளமான மேலும் அதன் பெரும்பகுதி உலக பாரம்பரிய தளமான இயங்ஃப்ராவ்-அலெட்ச்சு என்ற பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளது. பிளாட்டன் முக்கிய கிராமத்தைத் தவிர, இந்நகராட்சியில் இயசுட்டன் , பாஃப்லெரல்ப்பு, ரைட்டு மற்றும் வெய்சென்ரிட்டு ஆகிய குடியிருப்புகளும் உள்ளன.
பெலால்ப் சிகை உல்லாசப் போக்கிடமும் பிளாட்டன் பீ நேட்டர்சு கிராமமும் தென்கிழக்கில் ஒரு நேரடிப் பாதையில் சுமார் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) தொலைவில் அல்லது சாலை வழியாக சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் அமைந்துள்ளன.
வரலாறு
[தொகு]பிளாட்டன் கிராமம் முதன்முதலில் 1433 ஆம் ஆண்டில் உஃபென் டெர் பிளாட்டுன் என்று குறிப்பிடப்பட்டது.[6]
இக்கிராமப் பகுதிக்கு மேலே உள்ள பனிப்பாறை அனுபவம் 1910 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வருகிறது.[7]
1954 ஆம் ஆண்டில் பிளாட்டன் கிராமம் மோட்டார் பாதையுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் குடியிருப்பாளர்கள் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் அதிகளவில் வேலைகளுக்குத் சென்றுவிட்டனர். இதனால் மக்கள்தொகையும் ஓரளவு குறைந்தது.
பனிப்பாறை சரிவு
[தொகு]மே 28, 2025 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று 15.24 என்ற மத்திய ஐரோப்பிய கோடை நேரத்தில்[8][9] பிர்ச்சு பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட நிலச்சரிவால் பிளாட்டன் கிராமம் தோராயமாக 90% அழிக்கப்பட்டது.[10][11] நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமான நில அதிர்வு சமிக்ஞை பதிவானது. [8][11][12] பள்ளத்தாக்கின் இருபுறமும் பரவியிருந்த குப்பை கூம்பினால் தோராயமாக 2 கிமீ நீளம், 200 மீ அகலம் மற்றும் 200 மீ ஆழம் கொண்ட கிராமப் பகுதி புதைந்து அழிந்தது. [13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Foulkes, Imogen (28 May 2025). "Swiss glacier collapse buries most of village of Blatten". BBC News. https://www.bbc.com/news/articles/cnv1evn2p2vo.
- ↑ 2.0 2.1 "Arealstatistik Standard - Gemeinden nach 4 Hauptbereichen". Retrieved 13 சனவரி 2019.
- ↑ "Ständige Wohnbevölkerung nach Staatsangehörigkeitskategorie Geschlecht und Gemeinde; Provisorische Jahresergebnisse; 2018". 9 ஏப்ரல் 2019. Retrieved 11 ஏப்ரல் 2019.
- ↑ தினமலர். "பனிப்பாறை சரிந்து புதைந்த மலை கிராமம்: சுவிஸ் நாட்டில் இதுதான் முதல் முறை".
- ↑ Singh, Ritu. "Video: Swiss Village Nearly Wiped Out After Glacier Collapse Causes Catastrophic Landslide". NDTV World. NDTV. Retrieved 29 May 2025.
- ↑ Blatten in German, French and Italian in the online Historical Dictionary of Switzerland.
- ↑ Blatten (VS) in .php German, .php French and .php Italian in the online Historical Dictionary of Switzerland. Version of 2004-06-02.
- ↑ 8.0 8.1 "Event Information | Swiss Seismological Service". seismo.ethz.ch. Retrieved 2025-05-29.
- ↑ Hugon, Olivier; Master, Andy; Grept, Justin (2025-05-28). "Une grande partie du village de Blatten rayée de la carte: 'on a perdu notre village, pas notre cœur'". Le Nouvelliste. https://www.lenouvelliste.ch/valais/haut-valais/gigantesque-eboulement-a-blatten-une-partie-du-village-sous-les-decombres-notre-suivi-en-direct-1454317.
- ↑ "Le village de Blatten en grande partie détruit par l'effondrement du glacier de Birch". Radio Télévision Suisse. 2025-05-28. Stéphane Ganzer: "La nature nous dicte toujours sa propre règle",
Trois millions de mètres cubes ont dévalé le flanc de la montagne. Retrieved 2025-05-28.Le conseiller d'Etat Stéphane Ganzer explique dans le 19h30 que, selon les premières estimations, 90% du village ont disparu sous les décombres. [...] Il a indiqué que les trois millions de mètres cubes de matériel qui s'étaient accumulés sur le glacier du Birch sont descendus dans la vallée.
[State Councillor Stéphane Ganzer explained on the 19h30 news that, according to initial estimates, 90% of the village has been buried under the rubble. [...] He stated that the three million cubic meters of material that had accumulated on the Birch Glacier have flowed down into the valley.] - ↑ 11.0 11.1 Bonvin, Samuel; Zuber, Sophie (28 May 2025). "Effondrement du glacier: une partie de Blatten ensevelie". 20 minutes (Switzerland). Archived from the original on 2025-05-29.
Mercredi, vers 15h30, [...] au-dessus de la commune de Blatten (VS) s'est écroulé. [...] un tremblement de terre de magnitude 3,1 a d'ailleurs été enregistré dans la région au moment de l'effondrement.
[On Wednesday, around 15:30, [...] above the municipality of Blatten (Valais), broke away. [...] A 3.1-magnitude earthquake was also recorded in the region at the time of the collapse.] - ↑ "Blatten: le Conseil d'Etat déclare la situation particulière après les effondrements sur le glacier". Blatten: le Conseil d’Etat déclare la situation particulière après les effondrements sur le glacier.
- ↑ Pekovics, Michael (2025-05-30). "Dorf ist weg: Jetzt droht auch noch Flutwelle". Kurier: pp. 4.

