பிளாசுமாவின் கன அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளாசுமாவின் கன அளவு (Plasma volume) என்பது மனித உடலில் காணப்படும் குருதியிலுள்ள நீர்மப் பகுதியான பிளாசுமாவின் கன அளவாகும். உடலில் சுமார் 5 முதல் 6 லிட்டர் குருதியும் அதில் ஏறக்குறைய 3 லிட்டர் பிளாசுமாவும் காணப்படுகின்றன. பிளாசுமா, சீரம் (Serum) என்றும் அறியப்படுகின்றது. இந்த அளவுகள் 70 கிலோகிராம் நிறையுடைய மனிதரின் உடலில் உள்ள அளவாகும். குருதியில் காணப்படும் சிவப்பு, மற்றும் பல வகையான வெள்ளை அணுக்களும் சீரத்துடன் இணைந்து காணப்படும். பிளாசுமாவில் புரதம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், பாசுபரசு, ஐயோடின் போன்ற தனிமங்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. பிளாசுமாவே இவையனைத்தையும் உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது. உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை இவ்வாறு எடுத்துச் செல்வதும் பின் கழிவுப் பொருட்களை அகற்றவும் துணை செய்கின்றது. இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக குருதியில் காணப்படும் பல்வேறு பொருட்களைத் தனித்தனியாக பிரித்துச் சேமித்து, வேண்டும் போது தேவையான நோயாளிக்குக் கொடுத்து உயிரினைக் காக்கவும் முடியும்.

சில நேரங்களில் மருத்துவத்தின் போது நோயாளியின் உடலிலுள்ள குருதியின் அளவு, பிளாசுமாவின் அளவு முதலியவற்றைத் தெரிந்து இருப்பது நலமாகும். இதற்கு அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) கைகொடுக்கிறது.

இம்முறை ஆய்விற்கு ரீசா (RIHSA, Radio Iodinated Human Serum Albumin - கதிர் அயோடின் கலந்த மனித சீரம் அல்புமின்) தேவைப்படுகிறது. இந்த ஆய்விற்கு 37 கிலோ பெக்கரல் (Bq) அளவு ஐயோடின்-125 வேண்டும்.

சோதனை[தொகு]

ஒரு குறிப்பிட்ட அளவு (37kBq) ரீசாவை ஊசிமூலம் நோயாளிக்குச் செலுத்த வேண்டும். நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட அதே அளவு ரீசாவை திட்ட அளவாக தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட மருந்து 10 நிமிடங்களில் பிளாசுமாவில் சீராகக் கலந்து விடுகிறது .இப்போது 10 கன செ.மீ. அளவு குருதி ஊசிமூலம் நோயாளியிடமிருந்து எடுக்கப்படுகிறது. இக்குருதி சோதனைக் குழாயிலிட்டு நன்றாகச் சுழலச் செய்து சீரம் மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட சீரத்தில் 5 கன செ.மீ. அளவு மட்டும் எடுத்து அதிலுள்ள கதிரியக்கச் செயல்திறன் (activity) சிறப்பான கருவி மூலம் கணிக்கப்படுகிறது.

முன்பே பிளாசுமாவின் கன அளவு 3 லிட்டர் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே திட்டமாக எடுத்து வைத்துள்ள ரீசாவை 3000 கன செ.மீ. தண்ணீரில் நன்றாகக் கலந்து, அதில் 5 கன செ.மீ. அளவு எடுத்து அதிலுள்ள செயல்திறனை அளவிட வேண்டும். இவ்வாறு செய்வதால், கருவியில் ஒரே அளவுகோலில் அளவீடுகளைச் செய்யலாம். பிழை குறைவாகும்.

இவ்வாறு பெறப்பட்ட அளவீடுகள் பின்புல அளவையும் (Background activity) சேர்த்தே கிடைப்பதால், கதிரியக்கப் பொருட்கள் ஏதுமில்லாத நிலையில் பின்புலக் கதிர்வீச்சினை மட்டும் அளந்து கணிக்க வேண்டும். முதலில் எடுத்துக்கொண்ட அளவுகளிலிருந்து பின்புல அளவுகளைக் கழித்து விட்டால் அயோடின் 125 யிலிருந்து கிடைக்கும் அளவு மட்டும் கிடைக்கும்.

எடுத்துக்காட்டு[தொகு]

ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம்:

5 சி.சி. பிளாசுமாவிலுள்ள செயல்திறன் A (2880c/m) என்போம்.

திட்டளவான 3000 சிசி.யிலிருந்து எடுத்துக்கொண்ட 5 சிசி.ல் பெற்றசெயல்திறன் B (2640 c/m) என்போம்.

பின்புல எண்ணிக்கை C (120 c/m) என்றும் கொள்வோம்.

இப்போது ஒவ்வொரு சிசி யிலும், உண்மையில் பெறப்பட்ட செயல்திறனை மொத்தக் கனஅளவால் பெருக்கிக் கிடைக்கும் அளவு முதலில் எடுத்துக் கொண்ட மொத்தக் கதிரியக்க அளவாகும்.

. என்று கிடைக்கிறது.

இவ்வாறு பிளாசுமாவின் கனஅளவினைக் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாசுமாவின்_கன_அளவு&oldid=1549540" இலிருந்து மீள்விக்கப்பட்டது