உள்ளடக்கத்துக்குச் செல்

பிளவு நடைமேடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஸ்டன்-கேம்பிரிட்ஜ் ரெட் லைன் தொடருந்து சேவையின் ஆர்வர்ட் நிலையத்தில் பிளவு நிலை நடைமேடைகள்; இடதுபுறத்தில் உள்ள மேல் நடைமேடை காலியாக உள்ளது; அதே நேரத்தில் கீழ் நடைமேடையில் பயணிகள் நெரிசல் உள்ளது.

பிளவு நடைமேடை அல்லது அடுக்குநிலை நடைமேடை (ஆங்கிலம்: Split Platform; அல்லது Stacked Platform) என்பது ஒரு தொடருந்து வழித்தடத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நடைமேடைகள்; மேலும் கீழுமாக பயன்படுத்தப்படுவதைக் குறிப்பதாகும்.[1]

இரண்டு தொடருந்து வழித்தடங்களுக்கு ஏற்றவாறு ஒரு பெரிய தொடருந்து நிலையத்தைக் கட்டும் போது தள அமைப்புகள் அனுமதிக்காத சூழ்நிலைகளில்; இவ்வாறான பிளவு நடைமேடைகள் அல்லது அடுக்குநிலை நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன.

இரண்டு தொடருந்து வழித்தடங்கள் ஒரே நேரத்தில் ஒன்றையொன்று குறுக்காகக் கடக்க வேண்டிய நிலை ஏற்படும் போதும்; சில வேளைகளில் பிளவுபட்ட நடைமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன அல்லது அடுக்குநிலை நடைமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஒரே பொதுவான திசையில் இயங்கும் தொடருந்துகளுக்கு இடையில் வசதியான குறுக்கு-நடைமேடை பரிமாற்றத்தை, பிளவு நடைமேடை அமைப்பு வழங்குகிறது.

பயன்பாடு

[தொகு]
ஐக்கிய அமெரிக்காவில் கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் ஆர்வார்ட் தொடருந்து நிலையத்தில் பிளவு நடைமேடைகள்

எடுத்துக்காட்டாக, இலண்டன் பாதாளத் தொடர்வண்டி சுரங்கப்பாதையில், அதன் கட்டமைப்பு பெரும்பாலும் மேற்பரப்பில் உள்ள சாலை கட்டமைப்பையே பின்பற்றுகிறது. அங்குள்ள தொடர்வண்டி சுரங்கப்பாதைகள் பொதுவாக கட்டிடங்களுக்கு அடியில் செல்வதைத் தவிர்க்கின்றன. இதனால் இலண்டன் பாதாளத் தொடர்வண்டி சுரங்கப்பாதையில் பல இடங்களில் பிளவு நடைமேடைகள் அல்லது அடுக்குநிலை நடைமேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு சாலை மிகக் குறுகலாக இருக்கும் நிலையில், அந்தச் சாலைக்குச் சரிசமமாக கீழே தொடருந்து சுரங்கப் பாதையை அமைக்கும் போது இரண்டு தொடருந்து வழித்தடங்களைத் தனித்தனியாக அமைப்பது இயலாது. ஆகவே தொடருந்து வழித்தடங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குநிலையில் அமைக்கப்படுகின்றன. இதனால் பல நிலையங்கள் வெவ்வேறு நிலையிலான வழித்தடங்களைக் கொண்டிருக்கலாம்.[2]

அடுக்கு நிலை வழித்தடங்கள்

[தொகு]

தொடருந்து வழித்தடங்கள் ஒரு தொடருந்து நிலையத்திலிருந்து கிளைத்துச் செல்லும் போது, ​​அவை ஓர் இடத்தில் ஒன்றையொன்று குறுக்கும் நெடுக்குமாக வெட்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, சில நேரங்களில் பிளவு வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன; அல்லது அடுக்கு நிலை வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு குறுகலான இடத்தில், ஒரே பாதையில், மேலே ஒரு வழித்தடமும்; கீழே ஒரு வழித்தடமும் பயன்படுத்தப் படுகிறது. இந்த அமைப்புதான் பிளவு நடைமேடை எனப்படுகிறது.

மலேசியாவில் பிளவு நடைமேடை நிலையங்கள்

[தொகு]

சிங்கப்பூரில் பிளவு நடைமேடை நிலையங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Side Stacked Platform (Split Platform) is a station that has a platform for each track, split onto two or more levels". mrt.com.my. Retrieved 9 October 2025.
  2. Day & Reed 2008, ப. 52–54.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளவு_நடைமேடை&oldid=4369766" இலிருந்து மீள்விக்கப்பட்டது