பிளம்பூங்கான் கல்வெட்டு
![]() | |
செய்பொருள் | எரிமலைப் படிகப்பாறை |
---|---|
அளவு | நீளம் 170 செ.மீ; அகலம் 160 செ.மீ; உயரம் 5 மீட்டர் |
எழுத்து | பழைய ஜாவானிய மொழி சமசுகிருதம் |
உருவாக்கம் | 672 சக ஆண்டு (750) |
கண்டுபிடிப்பு | இந்தோனேசியா, பிளம்பூங்கான் பூங்கா, கௌமன் கிடுல் கிராமம், சிடோரெஜோ மாவட்டம், சலதீகா நகரம், மத்திய ஜாவா மாநிலம்[1] |
தற்போதைய இடம் | Dukuh Plumpungan, Kelurahan Kauman Kidul, Kecamatan Sidorejo, Kota Salatiga, Provinsi Jawa Tengah, ஜகார்த்தா |
அடையாளம் | PO2014102300172 (பதிவு 23 அக்டோபர் 2014) |
பதிவு | சலதீகா நகர கலாசார துறைத் தலைவரின் ஆணை எண். 432/022/417 (சூலை 30, 2019) |
பிளம்பூங்கான் கல்வெட்டு அல்லது அம்பாரான் கல்வெட்டு (ஆங்கிலம்: Plumpunga Inscription; இந்தோனேசியம்: Prasasti Plumpunga அல்லது Prasasti Hampran) என்பது இந்தோனேசியா, மத்திய ஜாவா மாநிலம், சிடோரெஜோ மாவட்டம், சலதீகா நகரம், கௌமன் கிடுல் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றைக்கல் (Monolith) செதுக்கல் ஆகும்.[2][3]
தற்போது இந்த ஒற்றைக்கல், சலதீகா நகரத்திலிருந்து பெரிங்கின் கிராமத்தை நோக்கி சுமார் 4 கி.மீ தொலைவில், பிளம்பூங்கான் பூங்கா வளாகத்தில் உள்ளது. இந்தக் கல்வெட்டு சலதீகா நகரத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.[4][5]
எரிமலைப் படிகப்பாறையில் எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டு கிபி 750 சாலிவாகன ஆண்டு 672-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தற்போது ஜகார்த்தா, இந்தோனேசியா சலதீகா நகர கலாசார துறையின் பாதுகாப்பில் உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் PO2014102300172. இந்தக் கல்வெட்டு சமசுகிருதம், பழைய ஜாவானிய மொழி ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.[6][7]
வரலாறு
[தொகு]


கல்வெட்டின் எழுத்துகள், ஒவ்வொரு மூலையிலும் உள்நோக்கியும் வெளிப்புறமாகவும் நீண்டு செல்லும் இரட்டைக் கோடு கொண்ட செவ்வகக் கட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.[8]
அந்தக் காலக்கட்டத்தில் பெர்டிக்கான் (Perdikan) எனும் வரி இல்லாத நிலங்கள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அரிதான நிகழ்வாகும்; ஏனெனில் அது அரசருக்கு உண்மையாகவே சேவை செய்த கிராமங்களுக்கு மட்டுமே அவ்வாறான தகுதி வழங்கப்பட்டது.[9]
அந்த நிகழ்வு அழியாமல் நினைவுபடுத்தும் வகையில், பானு மன்னர் பிளம்பூங்கான் கல்வெட்டில் எழுதினார்: "அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும்" என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொற்றொடர் (Çrir Astu Swasti Prajabhyah. கி.பி 750 சூலை 24 வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது.[10]
பானு பிரதேசம்
[தொகு]பெர்டிக்கான் (Perdikan) எனும் வரி இல்லாத நிலங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட இராச்சியத்திற்குள் உள்ள ஒரு பகுதி என்று பொருள். அந்தப் பகுதிக்கு சில சிறப்புப் பண்புகள் இருப்பதால், அதற்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும்.[11]
அத்துடன் அந்தப் பகுதிக்கு அனைத்து வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. மன்னர் பானு கொடுத்த பிரதேசம் என்பதால் பானு பிரதேசம் என்று அழைக்கப்பட்டது அந்தப் பிரதேசத்தில் சலதீகா மற்றும் அதன் சுற்றுப்புறங்களும் அடங்கும்.[12]
கல்வெட்டின் ஜாவானிய சமசுகிருத எழுத்துகள்
[தொகு]- //Srir = astu swasti prajabyah sakakalatita 672/4/31/..(..)
- Jnaddyaham //O//
- //dharmmartham ksetradanam yad = udayajananam yo dadatisabhaktya
- hampragramam triaramyamahitam = anumatam siddhadewyasca tasyah
- kosamragrawalekhaksarawidhiwidhitam prantasimawidhanam
- tasyaitad = bhanunamno bhuwi bhatu yaso jiwitamcatwa nityam
கல்வெட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு
[தொகு]
- மகிழ்ச்சியாக இருங்கள்! அனைத்து மக்களும்! சக ஆண்டு வெள்ளிக்கிழமை 672/4/31 (கி.பி. 760 சூலை 24) ஆகும்
- மதியம்
- அவரிடமிருந்து (பானு மன்னர்), நம்பிக்கைக்காக, சர்வவல்லமையுள்ள சபைக்காக, நிலம் அல்லது பூங்கா, அவர்களின் செழிப்புக்காக வழங்கப்பட்டது
- அம்பரா கிராமம்; திரிகிராமியா (சலாதிகா) அருகே; சீதா தேவியின் (தெய்வம்) ஆசீர்வாதத்துடன் வரி இல்லாத நிலம் ஆகும்
- எழுத்து அல்லது ஒற்றைக்கல் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது; இது உள்ளங்கையின் நுனியின் அமைப்பைக் கொண்டது
- பானு என்று அழைக்கப்படுபவரிடம் இருந்து, இந்தப் புனித கட்டிடம் அல்லது கோயில், எப்போதும் அவரின் நித்திய ஆத்மாவைக் கொண்டிருக்கும்[13][14]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sejarah Hari Ini (24 Juli 750): Prasasti Plumpungan, Penanda Hari Jadi Kota Salatiga". Good News from Indonesia. Retrieved 18 January 2022.
- ↑ "Kauman Kidul Miliki Potensi Wisata Alam dan Sejarah". Jateng Pos. Retrieved 11 January 2022.
- ↑ "Cagar Budaya Salatiga: Warganet Ingin Prasasti Plumpungan Lebih Diperhatikan". Solo Pos. Retrieved 11 January 2022.
- ↑ "Usulan Ditolak, Pembangunan Museum Bangunan Cagar Budaya di Plumpungan Batal". Sindonews.com. https://daerah.sindonews.com/berita/1249494/22/usulan-ditolak-pembangunan-museum-bcb-di-plumpungan-batal.
- ↑ Setiawan, Deni. "Duh, Pembangunan Museum Benda Cagar Budaya Plumpungan Salatiga Tertunda Lagi". Tribunnews.com. https://jateng.tribunnews.com/2017/10/19/duh-pembangunan-museum-benda-cagar-budaya-plumpungan-salatiga-tertunda-lagi.
- ↑ "Sunan Kalijaga dan Sejarah Kota Salatiga". Sindonews.com. https://daerah.sindonews.com/berita/1046360/29/sunan-kalijaga-dan-sejarah-kota-salatiga/.
- ↑ Mubarok, Imam. "Menengok Prasasti Plumpungan, cikal bakal Salatiga". Merdeka.com. https://www.merdeka.com/peristiwa/menengok-prasasti-plumpungan-cikal-bakal-salatiga.html.
- ↑ "Prasasti Plumpungan Lestari". Solo Pos. Retrieved 18 January 2022.
- ↑ "Sejarah Kota Salatiga" [History of the City of Salatiga]. Government of the City of Salatiga. Archived from the original on 19 August 2006.
- ↑ "Usulkan Revitalisasi Wisata Sejarah Plumpungan". Jateng Pos. Retrieved 18 January 2022.
- ↑ "Berawal dari Hampra, Ciptakan Budaya Kota". Suara Merdeka (in இந்தோனேஷியன்). 25 July 2004. Archived from the original on 3 November 2004.
- ↑ "Mengenal Batik Plumpungan, Motif Batik Khas Salatiga". Nusagates. Retrieved 11 January 2022.
- ↑ "Plumpungan Diharapkan Masuk Kurikulum Muatan Lokal". Portal Berita Pemerintah Provinsi Jawa Tengah. Retrieved 30 March 2019.
- ↑ "Salatiga Kembangkan Batik Plumpungan". Kompas.com. https://regional.kompas.com/read/2008/05/26/20402798/Salatiga.Kembangkan.Batik.Plumpungan.
மேலும் படிக்க
[தொகு]- Miksic, John N (1994-09-01), "Imagine Buddha in Prambanan: Reconsidering the Buddhist Background of the Loro Jonggrang Temple Complex", Journal of Southeast Asian Studies, 25 (2), Cambridge University Press: 442, doi:10.1017/s0022463400013692, ISSN 0022-4634 being a review of - Jordaan, Roy E; Rijksuniversiteit te Leiden. Vakgroep Talen en Culturen van Zuidoost-Azië en Oceanië (1993), Imagine Buddha in Prambanan : reconsidering the Buddhist background of the Loro Jonggrang temple complex, Vakgroep Talen en Culturen van Zuidoost-Azie en Oceanie, Rijksuniversiteit te Leiden, ISBN 978-90-73084-08-7