பிளக் கோநெட் நனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பிளக் கோநெட் நனோ ஆளில்லாத உலங்கு வானூர்தி

பிளக் கோநெட் நனோ (Black Hornet Nano) என்பது நோர்வேயின் புரொக்ஸ் டைனமிக்சினால் வடிவமைக்கப்பட்டு, பிரித்தானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்படும் ஓர் இராணுவ நுண்ணிய ஆளில்லாத வானூர்தி ஆகும்.

இது கிட்டத்தட்ட 10 செ.மீ x 2.5 செ.மீ அளவுடையதும், தரையிலுள்ள படைகளுக்கு உள்ளூர் சுற்றாடல் விழிப்புணர்வை வழங்கக் கூடியதும் ஆகும். இது கையினுள் அடங்கக் கூடியளவு சிறியதும், மின்கலம் உட்பட கிட்டத்தட்ட அரை அவுன்சு நிறையினை உடையது. இந்த ஆளில்லாத வானூர்தி முழு அசைவுக் காணொளி மற்றும் ஒளிப்படங்களை வழங்கக் கூடிய ஒளிப்படக் கருவியைக் கொண்டுள்ளது. £20 மில்லியன் செலவில் 160 அலகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[1][2][3]

பாவனையாளர்கள்[தொகு]

  • பிரித்தானிய தரைப்படை
  • நோர்வே தரைப்படை

உசாத்துணை[தொகு]

  1. Adrian Shaw (2013-02-03). "The eight inch spy in the sky: Tiny 'Black Hornet' helicopters snoop in Afghanistan in latest technology helping British troops - Mirror Online". Mirror.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  2. "Miniature surveillance helicopters help protect front line troops - News story - Inside Government". GOV.UK. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
  3. Matthew Weber (2013-02-07). "The Black Hornet Is A $195,000 Spy Plane That Fits In Your Hand - Gizmo Crazed". gizmocrazed.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளக்_கோநெட்_நனோ&oldid=2047736" இலிருந்து மீள்விக்கப்பட்டது