பில் நை தி சயன்ஸ் கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பில் நை தி சயன்ஸ் கை (Bill Nye the Science Guy 27 நவம்பர் 1955) என்பவர் அமெரிக்க அறிவியலாளர், பொறியாளர், புதுப்புனவர் நகைச்சுவையாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் 'பில் நை தி சயன்ஸ் கை' என்னும் நிகழ்ச்சி மூலம் அறிவியல் கருத்துகளைச் சோதனைகள் செய்து காட்டியும், நகைச்சுவையுடன் விளையாட்டுகள் செய்து காட்டியும் பேர் பெற்றவர். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் 1992 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ஒளி பரப்பானது.[1] இந்தக் காட்சிகளுக்காக எம்மி விருதுகள் 19 முறை வழங்கப்பட்டன.

வாழ்க்கைச்சுருக்கம்[தொகு]

1977 ஆம் ஆண்டில் பில் நை அமெரிக்காவில் வாசிங்டனில் பிறந்தார். நியூயார்க்கு கார்னல் பல்கலைக் கழகத்தில் பயின்று எந்திரவியல் பொறியாளர் பட்டம் பெற்றார். சியாட்டிலில் போயிங் நிறுவனத்தில் வானூர்திப் பொறியாளராகப் பணி செய்தார். தொலைக்கட்சிகளில் பகுதி நேர நகைச்சுவையாளராகத் தோன்றினார். பின்னர் 1980 களில் முழு நேரமும் அறிவியல் செய்திகளை, சிரிப்பு ஏற்படும்படியும் குழந்தைகள், மாணவர்கள் போன்றோருக்கு ஈர்ப்பாக இருக்கும் வண்ணம் விளக்கினார். பில் நை தி சயன்ஸ் கை என்ற பாத்திரத்தைப் புனைந்து கொண்டு, மேலங்கி, கழுத்தில் குறு பட்டை அணிந்து கொண்டு, தொலைக்காட்சியில் தோன்றி, அறிவியல் உண்மைகளையும் கருத்துகளையும் பார்ப்போர் பரவசப்படும் அளவுக்கு விளக்கிப் பேசுவார்.[2] நையின் கண்கள் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடரும் இவர் செய்தார். உலகில் மிகப் பெரியதாகக் கருதப்படுகிற அரசு சாராத விண்வெளி நிறுவனமான பிளானிட்டரி சொசைட்டியின் இயக்குநராக இருந்தார். பத்து நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.[3] 2001 ஆம் ஆண்டில் நாசா நிறுவனம் செவ்வாய்க் கோள் விண்வெளிப் பயணத்தில் பில் நை வடிவமைத்த மார்சன் சன் டயல் பயன்படுத்தப்பட்டது.[4]

மேற்கோள்[தொகு]

  1. Bill Nye, the Science Guy, September 10, 1993, April 12, 2016 அன்று பார்க்கப்பட்டது
  2. http://www.who2.com/bio/bill-nye/
  3. https://www.amazon.com/Bill-Nye/e/B00J8NC8SM
  4. https://www.sciencedaily.com/releases/1999/04/990422055433.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_நை_தி_சயன்ஸ்_கை&oldid=2707598" இருந்து மீள்விக்கப்பட்டது