உள்ளடக்கத்துக்குச் செல்

பில்லூ போச்கானாவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லூ போச்கானாவாலா
பிறப்புபில்லூ ஆதன்வாலா
1 ஏப்ரல் 1923
மும்பை, பிரித்தானிய இந்தியா
இறப்பு7 சூன் 1986(1986-06-07) (அகவை 63)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுசிற்பி
குறிப்பிடத்தக்க படைப்புகள்தீப்பொறி
பாணிநவீனத்துவம், உச்சயெளிமையியம்
வாழ்க்கைத்
துணை
ரத்தன் போச்கானாவாலா
பிள்ளைகள்1

பில்லூ போச்கானாவாலா(Pilloo Pochkhanawala)இந்தியாவில் முதலாவதாக சிற்பத்துறைக்கு வந்த மிகச்சில பெண் சிற்பிகளில் இவரும் ஒருவர் ஆவார்.[1] போச்கானாவாலா சமகாலத்தவர்களிடையே நவீன சிற்பத்தின் முன்னோடியாக தனது துடிப்பான படைப்புகள் மூலம்,தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[2]

பிறப்பு

[தொகு]

1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பிறந்தார்.இவரின் தந்தை பெயர் பிராம்ரோஸ் ஆர். அடேன்வாலா மற்றும் தாயார் பெயர் ஜெர்பாய் ஆவர்.[3]

கலை வாழ்க்கை

[தொகு]

இவர் ஒரு சிற்பியாக மாறுவதற்கு முன்பு விளம்பரங்களில் பணியாற்றினார். இவரது படைப்புகள் இயற்கையான மனித உருவங்களின் வடிவத்தை கொண்டிருந்தன.[4] இவர் தனது கலைப்படைப்புகளில் உலோகம், கல் மற்றும் மரம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி சுயமாகக் கற்றுக்கொண்ட கலைஞராக விளங்கினார்.[5] இவரது படைப்புகளில் சிக்கலான வரைபடங்கள், நாடகத் தொகுப்புகள் ஆகியவைகள் அடங்கும் எனிினும் இவர் தனது சிற்பங்களுக்காகவே நன்கு அறியப்பட்டவர்.[6] ஒரு கலைஞராக இருப்பதோடு மட்டுமல்லாமல், போச்கானாவாலா மும்பையில் கலைகளை எளிதாக்குபவராகவும் நடுவராகவும் இருந்தார். 1960 களில் இருந்து, இவர் பல ஆண்டுகளாக மும்பை கலை விழாவை ஏற்பாடு செய்தார்.[1] தனது சக கலைஞர்களுடன் சேர்ந்து, சர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் மண்டபத்தை மும்பையின் தேசிய நவீன கலைக்கூடமாக மாற்றுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இது தற்போது நாட்டின் முன்னணி அருங்காட்சியகங்களில் ஒன்றாகும், இது சமகால கலைகளைக் கொண்டுள்ளது.[4]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]

இவர் தனது வாழ்நாளில் பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக 1954 இல் அகில இந்திய சிற்பிகள் சங்கம் வழங்கிய வெள்ளிப் பதக்கம், பாம்பே கலைச் சங்கத்திலிருந்து பெற்ற மற்றொரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 1979 இல் புது தில்லியில் உள்ள லலித் கலா அகாதமியின் விருது ஆகியவை கிடைத்தன.

இறப்பு

[தொகு]

இவர் 1986 ஆம் ஆண்டு சூூன் 7 ஆம் தேதி இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Pilloo Pochkhanawala". JNAF. Retrieved 2021-03-22.
  2. ↑ . https://www.sothebys.com/en/buy/auction/2020/modern-contemporary-south-asian-art-2/pilloo-pochkhanawala-untitled.
  3. ↑ Indian Who's Who 1980-81 (in English). New Delhi: INFA Publications. p. 85.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 1 2 "14 Parsi artists dialogue in Delhi – in pictures – ArtRadarJournal.com" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 20 April 2020. Retrieved 2021-03-22.
  5. ↑ Yamini Mehta (2 June 2017). "Eternal frames". India Today (in ஆங்கிலம்). Retrieved 2021-03-22.
  6. ↑ "Pilloo Pochkhanawala (1923-1986) - Lot Essay". www.christies.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லூ_போச்கானாவாலா&oldid=4445138" இலிருந்து மீள்விக்கப்பட்டது