பில்லி அனந்த இலட்சுமி
பில்லி அனந்த இலட்சுமி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1999-2004; 2014-2019 | |
| முன்னையவர் | குரசாலா கன்னபாபு |
| தொகுதி | காக்கிநாடா ஊரகமம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பில்லி அனந்த இலட்சுமி (Pilli Ananta Lakshmi)(பிறப்பு 1971) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2014 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 2019 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இலட்சுமி கிழக்கு கோதாவரி மாவட்டம், சமல்கோட்டா மண்டலத்தில் உள்ள மாதப்பட்டினத்தில் பிறந்தார். இவரது தந்தை வெங்கடசாமி வக்காலப்புடியில் வசிக்கிறார். சதிபாபு என்கிற பில்லி வீர வெங்கட சத்தியநாராயண மூர்த்தியை மணந்தார்.[3] இவர்களுக்கு இராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.
அரசியல்
[தொகு]இலட்சுமி தனது அரசியல் வாழ்க்கையை 1999-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடங்கினார். 1999-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சம்பாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதியாக மாறியது.[4] இவர் 2014-இல் இரண்டாவது முறையாக வென்றார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டு, 2014 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில், ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் செல்லுபோயின சிறீனிவாச வேணுகோபால கிருஷ்ணாவை 9,048 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6] இவர் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். ஆனால் 2019 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் குரசலா கண்ணபாபுவிடம் 8,789 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[3] ஏப்ரல் 2015-இல், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் குழு உறுப்பினராக ஒரு வருட காலத்திற்கு இவர் பதவி வகித்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kakinada Rural Election 2024: Get Latest News Updates of the Kakinada Rural Constituency Seat in Andhra Pradesh Assembly Election 2024". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-28.
- ↑ "Kakinada Rural Election 2024: Get Latest News Updates of the Kakinada Rural Constituency Seat in Andhra Pradesh Assembly Election 2024". Indian Express - Gujarati (in குஜராத்தி). Retrieved 2024-05-28.
- ↑ 3.0 3.1 "Kakinada: Anantha Lakshmi is Telugu Desam choice". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-03-05. Retrieved 2024-05-28.
- ↑ Subrahmanyam, Deekshitula (2023-12-28). "People in Kakinada rural deprived of drinking water facility". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-28.
- ↑ "ఆంధ్రప్రదేశ్ విజేతలు | Sakshi". www.sakshi.com (in தெலுங்கு). Retrieved 2024-05-28.
- ↑ "Kakinada Rural Assembly Election Results 2024: Kakinada Rural Andhra Pradesh Election Schedule, Vote share and Results". Financialexpress (in ஆங்கிலம்). 2024-05-26. Retrieved 2024-05-28.
- ↑ "ఫలించిన కల | Sakshi". www.sakshi.com (in தெலுங்கு). Retrieved 2024-05-28.