பில்லிடைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லிடைட்டு
Billietite
பெக்கரெலைட்டு (மஞ்சள்) மற்றும் பில்லியடைட்டு (ஆரஞ்சு)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுBa(UO2)6O4(OH)6•8H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள் வகைகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்புசமபிளவு {001}, சமமற்ற பிளவு {110} மற்றும் {010}
விகுவுத் தன்மைஉடையும்
மிளிர்வுஅடமண்டைன்
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும், ஒளி கசியும்
அடர்த்தி5.28 - 5.36 g/cm3
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2]

பில்லிடைட்டு (Billietite) என்பது ஓர் அசாதாரணமான யுரேனியக் கனிமமாகும். இக்கனிமத்தில் பேரியம் கலந்துள்ளது. பில்லிடைட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு Ba(UO2)6O4(OH)6•8H2O. என்பதாகும். பொதுவாக தெளிவான மஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகங்களாக இது தோன்றுகிறது.[3] பெல்சியம் நாட்டின் கெண்ட்டு நகரத்திலுள்ள கெண்ட்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த படிகவியலாளரான வலேரே லூயிசு பில்லியெட்டு (1903-1944) என்பவரின் நினைவாக இக்கனிமத்திற்கு பில்லிடைட்டு எனப் பெயரிடப்பட்டது.

காங்கோ சனநாயகக் குடியரசின் ஆட்-கடங்கா மாகாணத்தில் உள்ள சிங்கோலோப்வே கனிமத்துடன் சேர்ந்து யுரேனியம் சுரங்கத்தின் பகுதியில் பில்லிடைட்டு முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 Mindat.org - Billietite
  3. M. Katherine Pagoaga, Daniel E, Appleman, & James M. Stewart "Crystal structures and crystal chemistry of the uranyl oxide hydrates becquerelite, billietite, and protasite" American Mineralogist, Volume 72, pages 1230-1238, 1987 [1]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லிடைட்டு&oldid=3618974" இலிருந்து மீள்விக்கப்பட்டது