பிலோ இருதயநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிலோ இருதயநாத் இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதியவர் ஆவார். இவர் மைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் மிதிவண்டியில் சுற்றியலைந்தவர் என்பது இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் மிதிவண்டியை மரத்தின் ஒரத்தில் நிறுத்தி மிதிவண்டியின் சுமைதளத்தை (கேரியரை) மரத்தோடு இணைக்கும் பலகையை போட்டு படுத்து உறங்குவார் [1].

ஆக்கங்கள்[தொகு]

இவர் இந்தியாவில் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி ஆவார். பிலோ இருதயநாத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறுபதிற்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.[2]

விருதுகள்[தொகு]

 • 1960களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
 • 1978ல் இந்திய அரசின் நல்லாசிரியர் விருது

சில புத்தகங்கள்[3][தொகு]

பிலோ இருதயநாத்தின் சில புத்தகங்கள்

இவர் 29 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார், இதில் சில

 • 1961, ஆதிவாசிகள், கலைமகள் காரியாலயம், சென்னை.
 • 1979, மேற்கு மலைவாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை
 • 1967, காட்டில் என் பிரயாணம், இளங்கோ பதிப்பகம், சென்னை
 • 1967, அறிவியல் பூங்கா, இளங்கோ பதிப்பகம், சென்னை
 • 1984, காட்டில் மலர்ந்த கதைகள், வானதி பதிப்பகம், சென்னை
 • 1984, காட்டில் கண்ட மர்மம், வானதி பதிப்பகம், சென்னை
 • 1985, யார் இந்த நாடோடிகள், வானதி பதிப்பகம், சென்னை
 • 1978, பழங்குடிகள், தமிழ் செல்வி நிலையம், சென்னை
 • 1977, ஆதிவாசிகள் மறைந்த வரலாறு, தமிழ் செல்வி நிலையம், சென்னை
 • 1967, இமயமலை வாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை
 • 1989, கேரளா ஆதிவாசிகள், வானதி பதிப்பகம், சென்னை
 • 1991, நீலகிரி படுகர்கள், வானதி பதிப்பகம், சென்னை
 • கொங்கு மலைவாசிகள், தென்றல் நிலையம், சிதம்பரம்
 • கோயிலும் குடிகளும், தென்றல் நிலையம், சிதம்பரம்
 • தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, தென்றல் நிலையம், சிதம்பரம்
 • குறிஞ்சியும் நெய்தலும், தென்றல் நிலையம், சிதம்பரம்
 • கோயிலைச் சார்ந்த குடிகள், தென்றல் நிலையம், சிதம்பரம்

மறைவு[தொகு]

இவர் 02-செப்டம்பர் 1992 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://sramakrishnan.com/view.asp?id=272&PS=1
 2. http://googleda.com/2017/07/23/snapshots-of-dr-philo/
 3. http://www.indianfolklore.org/journals/index.php/ifl/article/view/613/556
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலோ_இருதயநாத்&oldid=2775327" இருந்து மீள்விக்கப்பட்டது