பிலெய்ன்சு வில்ஹெம்சு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிலெய்ன்சு வில்ஹெம்சு மாவட்டம் (Plaines Wilhems district) மொரீசியசின் ஒன்பது மாவட்டங்களுள் ஒன்று. இத்தீவிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவே. இங்கு வந்து தங்கிய வில்ஹெம் லெய்க்னிக் என்பாரின் நினைவில் இப்பெயர் சூட்டப்பட்டது.

மொழி[தொகு]

இம்மாவட்டத்தில் வாழும் மூன்றரை லட்சம் மக்களில் 2,65,000 மக்கள் கிரியோலைத் தாய்மொழியாகவும், 27,000 மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகவும், ஏனையோர் போச்புரி, சீனம், தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.