உள்ளடக்கத்துக்குச் செல்

பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°7′45.43″N 101°38′34.41″E / 3.1292861°N 101.6428917°E / 3.1292861; 101.6428917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG12  பிலியோ டாமன்சாரா
| எம்ஆர்டி
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி.
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Phileo Damansara MRT Station
Stesen MRT Phileo Damansara
菲利欧白沙罗
அமைவிடம்செக்சன் 16,
பெட்டாலிங் ஜெயா மலேசியா
ஆள்கூறுகள்3°7′45.43″N 101°38′34.41″E / 3.1292861°N 101.6428917°E / 3.1292861; 101.6428917
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking 305; Motorbike 100
துவிச்சக்கர வண்டி வசதிகள் 37
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG12 
வரலாறு
திறக்கப்பட்டது KG12  (MRT) 16 திசம்பர் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
டாக்டர் இசுமாயில்
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
பண்டார் டாமன்சாரா
காஜாங் நிலையம்
டாக்டர் இசுமாயில்
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
புக்கிட் கியாரா
காஜாங் நிலையம் (எதிர்கால சேவை)
அமைவிடம்
Map

பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Phileo Damansara MRT station; மலாய்: Stesen MRT Phileo Damansara) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பிலியோ டாமன்சாரா வர்த்தக மையம் மற்றும் பெட்டாலிங் ஜெயாவின் வடக்குப் பகுதிகளான (செக்சன் 16, 17, 17A மற்றும் 19), புறநகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1]

இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் டிசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.

நிலைய அமைவிடம்

[தொகு]

இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இரண்டு நிலைகளைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலல்லாமல், இந்த நிலையம் இணைப்புவழிக்கு (Concourse Level) மேலே இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரு தீவு தளத்தைக் கொண்டுள்ளது.[2]

இஸ்பிரிண்ட் விரைவுச்சாலையின் வடக்கே பிலியோ டாமன்சாரா மாற்றுவழிக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம்; கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த நிலையத்தின் ஒரு நுழைவாயில் சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையைக் கடந்து செல்கிறது.

காஜாங் வழித்தடம்

[தொகு]

காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[3]

எம்ஆர்டி நிறுவனம்

[தொகு]

இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

நிலைய அமைப்பு

[தொகு]
L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A ஜாலான் 16/11 - தெற்குப் பக்கம் பேருந்து நிற்குமிடம், பிலியோ டாமன்சாரா வணிக மையம், இஸ்டின் தங்கும் விடுதி, சிபி கோபுரம்
B இசுபிரிண்ட் நெடுஞ்சாலை - வடக்குப் பக்கம் வாடகை - தனியார் வாகனம் நிறுத்துமிடம்; பெட்ரோனாஸ் இஸ்பிரிண்ட் நெடுஞ்சாலை

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி குறிப்புகள்
T815 [5]  KG12  பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A)
மலாயா பல்கலைக்கழகம் இசுபிரிண்ட் விரைவுச்சாலை
ஜாலான் 17/1
ஜாலான் உங்கு அசீஸ்
லிங்கோங்கான் புடி
இந்தப் பாதை T789  வழியை  KJ19  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையத்திற்கு மாற்றுகிறது
T816 [6]  KG12  பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A)
பெட்டாலிங் ஜெயா SS 2 இசுபிரிண்ட் விரைவுச்சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
ஜாலான் எஸ்எஸ் 2/75
ஜாலான் 19/8
ஜாலான் உங்கு அசீஸ்
ஜாலான் 17/2
ஜாலான் 17/13
ஜாலான் 17/22

காட்சியகம்

[தொகு]

பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Phileo Damansara - MRT Corp". Malaysia Rapid Transit Corporation Sdn Bhd. 26 September 2017. Retrieved 13 September 2025.
  2. "Phileo Damansara MRT Station | mrt.com.my". mrt.com.my. Retrieved 13 September 2025.
  3. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  4. "Phileo Damansara MRT station near Menara STAR, HQ of The Star newspaper". klia2.info. 29 January 2019. Retrieved 13 September 2025.
  5. RapidKL Bus Route T815
  6. RapidKL Bus Route T816

வெளி இணைப்புகள்

[தொகு]