பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம்

ஆள்கூறுகள்: 6°48′4″N 79°55′22″E / 6.80111°N 79.92278°E / 6.80111; 79.92278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
வகைமணிக்கூட்டுக் கோபுரம்
இடம்பிலியதலை, இலங்கை
கட்டுமான ஆரம்பம்11 செப்டம்பர் 1952
நிறைவுற்றது30 ஏப்ரல் 1953
உயரம்24மீட்டர்

பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம் (Piliyandala Clock Tower) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிலியந்தலை என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். இந்த கடிகார கோபுரம் பிலியந்தலையின் பிரபலமான அடையாளமாகும். உள்ளூர்வாசிகளின் கூற்றுபடியும் பிற ஆவணங்களின்படியும், இந்த கடிகார கோபுரம் தீவின் மிக உயரமான ஒன்றாகும். இது 23.8 மீ (78 அடி) உயரத்திற்கு 4.9 மீ (16 அடி) சுற்றளவு கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இது இருப்பதால், கணிசமான தொல்ல்லியல் நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தக் கோபுரம் பிலியந்தலை நகரத்திற்கு வரலாற்று முக்கியத்துவத்தை வழங்குகிறது. [1]

வரலாறு[தொகு]

டி. சைமன் சமரகூன் தனது தந்தை கார்னெலிஸ் விஜெவிக்ரெமா சமரக்கூன் மற்றும் தனது தாயின் நினைவாக இக்கடிகார கோபுரத்தை அமைத்தார். உள்ளூராட்சி அமைச்சர் கி. வி. வி. கன்னங்கரா அவர்களால் செப்டம்பர் 11, 1952 அன்று கடிகார கோபுரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானம் ஏழு மாதங்களில் நிறைவடைந்தது. மேலும், கடிகார கோபுரம் ஏப்ரல் 30, 1953 அன்று பயன்பாட்டுக்கு வந்து அன்றிலிருந்து இயங்கி வருகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]