பிலியந்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலியந்தலை
පිළියන්දල
புறநகர்
பிலியந்தலை is located in இலங்கை
பிலியந்தலை
பிலியந்தலை
ஆள்கூறுகள்: 6°51′0″N 79°57′0″E / 6.85000°N 79.95000°E / 6.85000; 79.95000ஆள்கூறுகள்: 6°51′0″N 79°57′0″E / 6.85000°N 79.95000°E / 6.85000; 79.95000
நாடுஇலங்கை
மாகாணம்மாவட்டங்கள்
நேர வலயம்இலங்கை நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு10300

பிலியந்தலை (Piliyandala) (சிங்களம்: පිළියන්දල என்பது இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது கொழும்புக்கு தெற்கே சுமார் 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவிலுள்ளது. இலங்கையின் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகை கொண்ட புறநகர்ப்பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது மொறட்டுவை, கெஸ்பேவா, மகாரகமை, பன்னிபிட்டி, பண்டராகமை மற்றும் கஹாதுடுவையின் புறநகர்ப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. பிலியந்தலை (மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அடுத்ததாக) ஒரு செழிப்பான சந்தையைக் கொண்டுள்ளது. மேலும் கெஸ்பேவா நகர சபையும் பிலியந்தலையில் அமைந்துள்ளது.

பெயர் காரணம்[தொகு]

கி.பி 15 ஆம் நூற்றாண்டில் யாபாபட்டுனாவைக் (நவீன யாழ்ப்பாணம்) கைப்பற்றிய பின்னர் இளவரசர் சபுமால், கோட்டே இராச்சியத்தில் மன்னனைச் சந்திப்பதற்கு முன்பு இங்கு பகுதியில் தனது உடையை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பிலியந்தலை என்ற பெயர் 'பிலி + அண்டி + டோலா' (පිළි+ඇඳි+දොල) என்ற சொற்களிலிருந்து உருவானது. அதாவது இளவரசன் குளித்து உடைகளை மாற்றிய நீரோடை எனப்பொருள். இந்த நீரோடை இன்னும் பிலியந்தலை வழியாகச் செல்கிறது. ஆனால் இப்போது அது ஒரு சிறிய நீரோடையாகவே உள்ளது. [1]

பிலியந்தலை மணிக் கூட்டுக் கோபுரம்[தொகு]

உள்ளூர்வாசிகள் மற்றும் ஆவணங்களின்படி, பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம் தீவின் மிக உயரமான ஒன்றாகும். இது 16 அடி சுற்றளவுடன் 78 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. த்னது பெற்றோர்களான கார்னெலிஸ் விஜெவிக்ரெமா சமரக்கூன் மற்றும் தாயாரின் நினைவாக டி. சைமன் சமரகூன் என்பவர் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைத்தார். கோபுரத்தின் அடிக்கல் அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் கி. வி. வி. கன்னங்கரா அவர்களால் செப்டம்பர் 11, 1952 அன்று நாட்டப்பட்டது. ஏழு மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மணிக்கூட்டுக் கோபுரம் ஏப்ரல் 30, 1953 அன்று இயக்கப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் மணிக்கூட்டுக் கோபுரம் தொல்லியல் மதிப்பாகக் கருதப்படுகிறது. இதனால் பிலியந்தலை நகரத்திற்கு ஒரு வரலாற்று பின்னணியை வழங்குகிறது. [2]

பிலியந்தலை மணிக்கூட்டுக் கோபுரம்

கல்வி[தொகு]

இலங்கையில் நிறுவப்பட்ட முதல் தேசிய விளையாட்டுப் பள்ளியான பிலியந்தலை மத்தியக் கல்லூரி இந்த புறநகரில் அமைந்துள்ளது. [கி. வி. வி. கன்னங்கரா]] அவர்களால் நிறுவப்பட்ட முதல் மத்தியக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும் மேலும் சுமார் 5,000 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். ரக்பி , கேரம், துடுப்பாட்டம், கால்பந்து விளையாட்டு, பெண்கள் கால்பந்து, சதுரங்கம், வுஷு, இறகுப்பந்தாட்டம், கராத்தே, நீச்சல், தடகளம், கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், வலைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளை இந்த பள்ளி வழங்குகிறது. இப்பகுதியில் மேலும் சில பிற பிரபலமான பள்ளிகளும் அமைந்துள்ளன. [3]

இப்பகுதியிலுள்ள பள்ளிகளைத் தவிர, நாட்டின் மிக மதிப்புமிக்க பொறியியல் பல்கலைக்கழகமான மொறட்டுவைப் பல்கலைக்கழகம் இங்கிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

பிலியந்தலையில் பெரும்பான்மையாக சிங்களவர் இருக்கின்றனர். இலங்கைச் சோனகர் , தமிழர்கள் போன்ற பிற இனத்தைச் சேர்ந்த சிறு சமூகங்கள் உள்ளன.

மதம்[தொகு]

பிலியந்தலையில் ஏராளமானதேரவாத பௌத்தத்த்தின் போதனைகளைப் பின்பற்றுகின்றன. இங்கு பல தேவாலயங்களும் உள்ளன.

பிலியந்தலா வைசாகத் தோரணம்[தொகு]

ஜாதக கதைகளின்படி இலங்கை, பௌத்த கலாச்சாரத்திற்கு தனித்துவமான தோரணக் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இலங்கையின் வைசாகப் பருவத்தில், பிலியந்தலை தோரணம் என புகழ்பெற்ற விளக்குகளால் சூழப்பட்ட ஒரு மண்டபம் பிலியந்தலை மத்தியக் கல்லூரிக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாதக கதையின் ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலியந்தலை&oldid=3174835" இருந்து மீள்விக்கப்பட்டது