பிலிம் சுருள்
பிலிம் சுருள் (Roll film) என்பது ஒளிப்படம் எடுக்கும்போது படத்தை பதிவு செய்யும் ஒரு சுருளாகும். பிலிம் சுருள் காமிராவில் வைத்து படம் எடுப்பதற்கு முன்பும், பின்பும் அதனை இருட்டில் வைத்திருப்பது அவசியமாகும். ஒளி எதிா்பாராமல் சிறிது விழுந்தாலும் பிலிம் சுருளில் பதிந்துள்ள காட்சி பாதிப்புக்குள்ளாகும். வெள்ளி புரோமைடு பூசப்பட்டுள்ள பிலிம் சுருளில் படம் எடுக்கும்போது விழும் ஒளி, வேதி வினை காரணமாக அதனை வெள்ளியாகக் குறைக்கிறது. அப்போது ஒளிவிழுந்த பகுதியில் வெள்ளி புரோமைடும் காணப்படும். இவ்வாறு படம் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை இருட்டறையில் வைத்து வேறு சில வேதி கரைசலில் கழுவி சீராக்குதல் ( PROCESSING ) வேண்டும். இந்தப் பணிக்கு பின்பே நமக்குத் தேவையான ஒளிப்படங்கள் கிடைக்கின்றன. [1]
பிலிம் சுருளில் நிகழ்வது ஒளி வேதியியல் வினையாகும். பிலிம் சுருள் இருட்டறையில் இல்லையெனில் ஒளிவிழக்கூடாத பகுதியில் கூட ஒளிபட்டு வெள்ளி புரோமைடு வேதிவினைபுாிந்து வெள்ளி அணு மட்டுமே மிஞ்சும்.
மேற்கோள்[தொகு]
- ↑ அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?