பிலிப்பு தெ மெல்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலிப்பு தெ மெல்லோ
பிறப்புஏப்ரல் 27, 1723(1723-04-27)
கொழும்பு, இலங்கை
இறப்பு10 ஆகத்து 1790(1790-08-10) (அகவை 67)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதமிழ்ப் புலவர், தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர்
சமயம்கிறித்தவம்

பிலிப்பு தெ மெல்லோ (Philip de Melho, ஏப்ரல் 27, 1723 - ஆகத்து 10, 1790) கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர். எபிரேயு, கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசம், தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.[1]

கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். 1753 இல் இலங்கையின் வட மாகாணக் குரவராய் நியமனம் பெற்று யாழ்ப்பாணம் வந்தார்.[1] 1759 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார்.[1] அத்துடன் சூடாமணி நிகண்டு 2ஆம் தொகுதிக்கு அனுபந்தமாக 20 உவமைப் பாட்டுகளைப் பாடிச் சேர்த்தார். இவை மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள் என்ற பெயரில் மானிப்பாயில் அச்சிடப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. 12வது தொகுதியோடு நூறு பாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடியிருக்கிறார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna. தெல்லிப்பளை, பிரித்தானிய இலங்கை: American Ceylon Mission Press. பக். 131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பு_தெ_மெல்லோ&oldid=2733664" இருந்து மீள்விக்கப்பட்டது