பிலிப்பீன்சு செனட் அவை
பிலிப்பீன்சு செனட் அவை Senate of the Philippines Senado ng Pilipinas | |
|---|---|
| பிலிப்பீன்சின் 20-ஆவது காங்கிரசு | |
பிலிப்பீன்சு செனட் அவையின் சின்னம் | |
பிலிப்பீன்சு செனட் அவையின் கொடி | |
| வகை | |
| வகை | |
ஆட்சிக்காலம் | 2 தவணைகள் (12 ஆண்டுகள்) |
| வரலாறு | |
| தோற்றுவிப்பு | அக்டோபர் 16, 1916 |
| தலைமை | |
செர்வின் கட்சாலியன் (மக்கள் கூட்டணி) சூன் 17, 2026 முதல் | |
திட்டோ சாட்டோ (மக்கள் கூட்டணி) சூன் 17, 2026 முதல் | |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 24 செனட்டர்கள் |
அரசியல் குழுக்கள் |
|
| செயற்குழுக்கள் | 41 நிலைக்குழுக்கள்; 18 தற்காலிகக் குழுக்கள் |
ஆட்சிக்காலம் | 6 ஆண்டுகள், மீண்டும் ஒருமுறை |
| Authority | பிரிவு VI, பிலிப்பீன்சு அரசியலமைப்பு |
| தேர்தல்கள் | |
| பெரும்பான்மை வாக்குப்பதிவு | |
தேர்தல்தேர்தல் | அக்டோபர் 3, 1916 |
அண்மைய தேர்தல் | மே 12, 2025 (12 இடங்கள்) |
அடுத்த தேர்தல் | மே 8, 2028 (12 இடங்கள்) |
| குறிக்கோளுரை | |
| அமைதிக்கு வழிவகுக்கும் சட்டம் நிறைவேறட்டும் (Leges servatae pax fiat) | |
| கூடும் இடம் | |
| GSIS கட்டிடம், நிதி மையம், பசாய் | |
| வலைத்தளம் | |
| senate | |
| விதிகள் | |
| Rules of the Senate | |
பிலிப்பீன்சு செனட் அவை (ஆங்கிலம்: Senate of the Philippines; பிலிப்பினோ: Senado ng Pilipinas) என்பது பிலிப்பீன்சு நாட்டின் பிலிப்பீன்சு காங்கிரசின் (Congress of the Philippines) மேலவை ஆகும்.[1] இதன் கீழவையாக பிலிப்பீன்சு பிரதிநிதிகள் அவை (House of Representatives of the Philippines) செயல்படுகிறது. பிலிப்பீன்சு செனட் அவை மொத்தம் 24 செனட் உறுப்பினர்களைக் (செனட்டர்கள்) கொண்டுள்ளது.
இவர்கள் பன்மைத்துவ-ஒட்டுமொத்த (Plurality-at-large) வாக்குப்பதிவு முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் (அதாவது, செனட் தேர்தல்களில் பிலிப்பீன்சு நாடு முழுவதும் ஒரே ஒரு தேர்தல் தொகுதியாகக் கருதப்படுகிறது). செனட் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலத்திற்குப் பணியாற்றுகிறார்கள். மேலும் பாதியளவு செனட் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செனட் உறுப்பினர், மீண்டும் போட்டியிட அனுமதிக்கப் படுவதற்கு முன்பு, குறைந்தது ஒரு முறையாவது பதவி வகிக்காமல் இருக்க வேண்டும்.
வரலாறு
[தொகு]1987-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் செனட் அவை மீண்டும் கொண்டுவரப்பட்டபோது, சுழற்சி முறைத் தேர்தல்களை ஒழுங்கான முறையில் நிறுவுவதற்காக இடைக்கால விதிகள் சேர்க்கப்பட்டன. 1987-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 செனட் உறுப்பினர்களும் 1992-ஆம் ஆண்டு வரை தங்களின் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்து பணியாற்றினார்கள்.
1992 ஆம் ஆண்டில், மொத்தம் உள்ள 24 செனட் இடங்களுக்கும் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன; இதில் அதிக வாக்குகள் பெற்ற முதல் 12 வேட்பாளர்கள் 1998 ஆம் ஆண்டு வரை முழு பதவிக் காலத்திற்கும், அடுத்த 12 வேட்பாளர்கள் 1995 ஆம் ஆண்டு வரை பாதி பதவிக் காலத்திற்கும் பணியாற்றினார்கள்.
1945 முதல் 1972 வரை
[தொகு]அதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் முழு பதவிக்காலத்திற்கும் பணியாற்றுகிறார்கள். 1945 முதல் 1972 ஆம் ஆண்டு வரை, செனட் அவை ஒரு தொடர்ச்சியான அமைப்பாக (Continuing body) இருந்தது; அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எட்டு இடங்களுக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டது.
சட்ட முன்வரைவுகள், அதிபரின் கையொப்பத்திற்குச் சென்று சட்டமாவதற்கு முன்பு; அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமின்றி, உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவும்; தகுதிநீக்க வழக்குகளை (Impeachment cases) விசாரிக்கவும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பு செனட் அவை மட்டுமே ஆகும்.
செனட் அவையின் தலைவர்
[தொகு]செனட் அவையின் தலைவர் அதன் தலைமை அதிகாரியாகவும், செனட் அவையின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரியாகவும் செயல்படுகிறார். இவர் செனட் உறுப்பினர்களால் தங்களுக்குள் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[2] பிலிப்பீன்சு அதிபர் பதவிக்கான அடுத்தடுத்த வரிசையில் செனட் அவையின் தலைவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். சூன் 2026 நிலவரப்படி, இப்பதவியை செர்வின் கட்சாலியன்[3] (Sherwin Gatchalian) வகிக்கிறார்.
தகுதிகள்
[தொகு]1987 ஆம் ஆண்டு பிலிப்பீன்சு அரசியலமைப்பின் ஆறாவது பிரிவின் (Article VI), மூன்றாவது பிரிவில் (Section 3) செனட் அவையின் உறுப்பினராவதற்கான தகுதிகள் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன:
ஒரு நபர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பிலிப்பீன்சு செனட் அவையில் உறுப்பினராக முடியும்:
- பிலிப்பீன்சில் பிறந்த குடிமகனாக இருக்க வேண்டும்;
- தேர்தல் நடக்கும் நாளில், குறைந்தது 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்;
- படிக்கவும் எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும்;
- பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும்;
- தேர்தல் நடக்கும் நாளுக்கு முன்னதாக, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் பிலிப்பீன்சில் வசித்தவராக இருக்க வேண்டும்;
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Composition of the Senate". Senate of the Philippines. Archived from the original on January 20, 2024. Retrieved January 20, 2024.
- ↑ "Rules of the Senate" (PDF). Senate of the Philippines. pp. 9–11.
- ↑ Paurom, Dan (2016-03-31). "Sherwin Gatchalian: Being Filipino not about bloodline". Philippine Daily Inquirer (in ஆங்கிலம்). Retrieved 2023-11-04.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Senate of the Philippines பற்றிய ஊடகங்கள்- Official Website
- Official Government Portal