உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பீன்சு அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பீன்சு அரசு
Government of
Republic of the Philippines
Pamahalaan ng Pilipinas
Coat of arms of the Philippines
உருவாக்கம்1898
உருவாக்குதல் ஆவணம்பிலிப்பீன்சு அரசியலமைப்பு
சட்டவலயம்பிலிப்பீன்சு குடியரசு
வலைத்தளம்www.gov.ph
சட்டவாக்கக் கிளை
சட்டவாக்க அவைபிலிப்பீன்சு காங்கிரசு
கூடும் இடம்பதாசாங் பம்பான்சா வளாகம் பிரதிநிதிகள் சபை
செயல் கிளை
Leaderஅதிபர்
நியமிப்பவர்நேரடித் தேர்தல்
தலைமையகம்மலகாலாங் அரண்மனை, சான் மிகுவெல், மணிலா
முக்கிய உறுப்புபிலிப்பீன்சு அமைச்சரவை
துறைகள்பிலிப்பீன்சு நிர்வாகத் துறைகள்
நீதித்துறை கிளை
நீதிமன்றம்பிலிப்பீன்சு உச்ச நீதிமன்றம்
இருக்கைஉச்ச நீதிமன்றக் கட்டிடம், எர்மிடா, மணிலா

பிலிப்பீன்சு அரசு அல்லது பிலிப்பீன்சு அரசாங்கம் (ஆங்கிலம்: Government of the Philippines; பிலிப்பினோ: Pamahalaan ng Pilipinas அல்லது Gobyerno ng Pilipinas) சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று ஒன்றையொன்று சார்ந்த நிர்வாகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பிலிப்பீன்சு ஒரு நாடாளுமன்றம்; ஒரு மக்களாட்சி அரசியலமைப்புக் குடியரசின் கீழ் ஒற்றையாட்சி நாடாக ஆளப்படுகிறது, இதில் அதிபர் பல கட்சி அமைப்பிற்குள் நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார்.

மூன்று கிளைகளின் அதிகாரங்களும் பிலிப்பீன்சின் அரசியலமைப்பால் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன: சட்டமன்ற அதிகாரம் இரு அவைகளைக் கொண்ட பிலிப்பீன்சு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது—இதில் பிலிப்பீன்சு மேலவை (Senate of the Philippines) என்பது மேல் அவையாகவும்; பிலிப்பீன்சு பிரதிநிதிகள் அவை (House of Representatives of the Philippines)[1] கீழ் அவையாகவும் உள்ளன.

செயலாட்சியர் அதிகாரம் என்பது அதிபரின் தலைமையிலான அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது. நீதித்துறையின் அதிகாரம் நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இதில் பிலிப்பீன்சு உச்ச நீதிமன்றம் மிக உயர்ந்த நீதி அமைப்பாக விளங்குகிறது.

நிர்வாக அமைப்பு

[தொகு]

அரசாங்கத்தின் நிர்வாகக் கிளை, அதிபரால் வழிநடத்தப்படும் பிலிப்பீன்சு அமைச்சரவை; மற்றும் அனைத்து நிர்வாகத் துறைகளையும் உள்ளடக்கியதாகும். அதிபரும்; துணை அதிபரும் ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு, தேசிய மக்கள் வாக்களிப்பின் மூலம் தனித்தனியாக நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பிலிப்பீன்சு துணை அதிபர் வரம்பற்ற முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றாலும்; (தொடர்ச்சியாக இரண்டு பதவிக் காலங்களுக்கு மட்டுமே வரம்பு விதிக்கப்பட்டுள்ளது), அதிபர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் அதிபர் பொங்பொங் மார்க்கோசு; மற்றும் துணை அதிபர் சாரா துதெர்த்தே (Sara Duterte) ஆவர்; இவர்கள் இருவரும் 2022-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிபர்

[தொகு]

பிலிப்பீன்சு அதிபர் அந்நாட்டின் முதன்மை நிர்வாகி ஆவார். இவர் நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார்.[2] அதிபர் அனைத்து நிர்வாகத் துறைகளுக்கும் (Executive departments of the Philippines) தலைமை தாங்குகிறார். பிலிப்பீன்சு அமைச்சரவையை (Cabinet of the Philippines) உருவாக்கும் இந்தத் துறைகளின் தலைவர்கள், நியமனங்களுக்கான ஆணையத்தின் (Commission on Appointments) ஒப்புதலுக்கு உட்பட்டு பிலிப்பீன்சு அதிபரால் நியமிக்கப்படுகிறார்கள். அதிபர் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கண்காணிக்கிறார். அதிபர் நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம், பொதுமன்னிப்பு வழங்கலாம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். எந்தவொரு சட்ட முன்வரைவையும் நிராகரிக்கும் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். அத்துடன், நாடாளுமன்றத்திற்கான சட்டமன்ற நிகழ்ச்சி நிரலையும் நிர்ணயிக்கிறார்.

துணை அதிபர்

[தொகு]

பிலிப்பீன்சின் துணை அதிபர் (Vice President of the Philippines) என்பவர் பிலிப்பீன்சு நாட்டின் துணை முதன்மை நிர்வாகி ஆவார். அதிபர் ராஜினாமா செய்தாலோ, அரசியல் குற்றச்சாட்டின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, அல்லது நிரந்தரமாகத் தகுதி இழந்தாலோ அல்லது மரணம் அடைந்தாலோ, பதவி ஏற்பதற்கான அடுத்த வாரிசு வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

துணை அதிபர் வழக்கமாக, அதிபரின் அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக பொறுப்பு வகிப்பார். மேலும் நியமனங்களுக்கான ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே துணை அதிபர் நியமிக்கப்படலாம். துணை அதிபர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் ஓர் உறுப்பினரை (வழக்கமாக ஒரு கட்சி உறுப்பினரை) புதிய துணை அதிபராக அதிபர் நியமிப்பார். இந்த நியமனம், பின்னர் நாடாளுமன்றத்தின் முக்கால்வாசி (மூன்றில் நான்கு பங்கு) வாக்களிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ வார்ப்புரு:Cite executive order
  2. ↑ "New law grants President authority to streamline executive agencies". www.pna.gov.ph (in ஆங்கிலம்). Retrieved 2025-10-02.
  3. ↑ Philippine Government

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு_அரசு&oldid=4631034" இலிருந்து மீள்விக்கப்பட்டது