பிலிப்பீன்சில் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிராமத்து சிறுவர்கள் பிலிப்பீன்சில் கூடைப்பந்தாட்டம் ஆடும் படம்.

பிலிப்பீன்சில் விளையாட்டு (Sports in the Philippines) என்பது பிலிபினிய கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது. பிலிப்பீன்சில் கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கால்பந்து, பில்லியார்ட்சு, டென்னிசு கைப்பந்தாட்டம் ஆகிய ஆறு பிரதான விளையாட்டுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பிலிப்பீன்சு வெப்பமண்டல நாடாக இருக்கின்ற போதிலும், உறைபனிச்சறுக்கு இங்கு பிரபலமாக விளங்குகின்றது.[1][2] தடகள விளையாட்டுகள், பாரம் தூக்குதல், தற்காப்புக் கலைகள் போன்ற விளையாட்டுகள் பிலிப்பீன்சில் பிரபல பொழுதுபோக்குகளாகக் காணப்படுகின்றன.

இவை தவிர அடிபந்தாட்டம், பௌலிங், நீச்சல், டைக்குவாண்டோ, மற்போர், ஆழ்நீர் தாவுதல், கயகிங், பாய்மரப் படகோட்டம், சேவல் சண்டை, குதிரை ஓட்டம், துடுப்பாட்டம், அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், மோர்ட்டார் ஓட்டம், செபாக் டக்ரோ, ஜெய் அலை போன்ற விளையாட்டுக்களும் குறிப்பிடத்தக்கன. இங்கு சேவல் சண்டை மிகவும் பரந்த அளவில் பிலிப்பீன்சில் காணப்படுகின்றது. இது பரந்த மக்கள் கூட்டத்தைக் கவர்கின்றது. இவர்கள் பறவைகள் சண்டை முடிவிற்கு பணயம் வைக்கின்றனர்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]