பிலால் சுறா
பிலால் சுறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Negaprion |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NegaprionN. acutidens
|
இருசொற் பெயரீடு | |
Negaprion acutidens (Rüppell, 1837) | |
Range of the sicklefin lemon shark | |
வேறு பெயர்கள் | |
Aprionodon acutidens queenslandicus Whitley, 1939 * ambiguous synonym |
பிலால் சுறா அல்லது அரிவாள் துடுப்பு எலுமிச்சை சுறா (sicklefin lemon shark) என்பது இந்தோ-பசிபிக்கின் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாக உள்ள கார்சார்ஹினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ரெக்வியாம் சுறா இனமாகும். இது அமெரிக்காவின் நன்கு அறியப்பட்ட எலுமிச்சை சுறாவுடன் (N. brevirostris) நெருங்கிய தொடர்புடையது; இரண்டு இனங்களும் தோற்றத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை, பரந்த தலை கொண்ட திட உடல் சுறாக்களாக, கிட்டத்தட்ட சம அளவுள்ள இரண்டு முதுகு துடுப்புகள், மஞ்சள் நிறமுடைய உடலைக் கொண்டவை. இதன் பெயரான அரிவாள் துடுப்புச் சுறா என்பதற்கு ஏற்ப, இந்தச் சுறா அமெரிக்க எலுமிச்சை சுறாவிலிருந்து வேறுபடுவதாக இது அரிவாள் வடிவ துடுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த இனமானது 3.8 m (12 அடி) நீளம் வரை வளரக்கூடியது. மேலும் இவை பொதுவாக சதுப்புநில முகத்துவாரங்கள் முதல் பவளப் பாறைகள் வரை பல்வேறு வாழ்விடங்களில் . 92 m (302 அடி) ஆழத்திலுள்ள நீரில் வாழ்கிறது.
பொதுவாக இவை எதிர்ப்பு தெரிவிக்காத எளிய உணவுகளையே மெதுவாக வேட்டையாடும். அரிவாள் எலுமிச்சை சுறா அரிதாகவே நீண்ட தூரம் பயணிக்கிறது. இதனால் பல தனிச் சுறாக்களை குறிப்பிட்ட இடத்தில் ஆண்டு முழுவதும் காணலாம். இதன் குடும்பத்தின் மற்ற சுறாக்களைப் போலவே, இந்த இனமும் குட்டிகளை ஈனுகின்றவை ஆகும். பெண் சுறாக்கள் ஒவ்வோரு ஆண்டும் 10-11 மாதங்கள் கருவுற்றறிருந்து ஒரு ஈற்றில் 13 வரையிலான குட்டிகளை ஈனக்கூடியது. இவை பொதுவாக தயக்கம் மிக்கவை. இவற்றை அணுகினால் விலகி செல்லக்க்கூடியவை. மனிதர்களுக்கு தீங்கு செய்யாதவை. ஆனால் இவற்றைச் சீண்டினால் மனிதர்களைத் தாக்கும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த மீன் இனத்தை அழியவாய்ப்புள்ள இனமாக வகைப்படுத்தியுள்ளது. இது குறைந்த இனப்பெருக்க உற்பத்தித்திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், இதன் இறைச்சி, துடுப்புகள், கல்லீரல் எண்ணெய்களுக்காக கட்டுப்பாடற்ற முறையில் பிடிக்கப்படுவதால் இதன் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Simpfendorfer, C., Derrick, D., Yuneni, R.R., Maung, A., Utzurrum, J.A.T., Seyha, L., Haque, A.B., Fahmi, Bin Ali, A., , D., Bineesh, K.K., Fernando, D., Tanay, D., Vo, V.Q. & Gutteridge, A.N. 2021. "Negaprion acutidens". IUCN Red List.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)