பிலால் ஆசிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகமது பிலால் ஆசிப் (Mohammad Bilal Asif (பிறப்பு: செப்டமபர் 24, 1985) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1] இவர் பாக்கித்தான் அணிக்காக, தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

முகமது பிலால் ஆசிப் செப்டம்பர் 24, 1985 இல் பிறந்தார். இவரின் தந்தை குவைத்தில் மின் வினைஞராக வேலை பார்த்து வந்தார். இவரின் மருமகன் சாக்கித் சையத் உள்ளூர்ப் போட்டிகளில் வேகப் பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

இவர் விளையாடிய முதல் இருபது 20 போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுக பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை புரிந்தார்.[4][5] 2018 ஆம் ஆண்டிற்கான பாக்கித்தான் கோப்பைக்கான போட்டியில் இவர் சிந்து மாகாணம் சார்பாக விளையாடினார்.[6] இந்தத் தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடி 6 இலக்குகளைக் கைப்பறினார்.இதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[7]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2015 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார். ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.[8] 2015 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அக்டோபர் 3 இல் அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் மட்டையாட்டத்தில் 3 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எடுக்காமல் பன்யங்கரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் 8 ஓவர்கள் வீசி 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]

அக்டோபர் 5 இல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தனது முதல் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணி 161 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது.மேலும் பிலால் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் துவக்க வீரராக களம் இறங்கி 39 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்தார்.[10] ஆனால் இந்தப் போட்டியில் இவரின் பந்துவீச்சு முறையானது சந்தேகத்திற்கு உள்ளானது.[11] இதனால் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரிலிருந்து விலக்கப்பட்டார்.[12] பின் இவரின் பந்துவீச்சு முறையானது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் அக்டோபர் 30, 2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[13]

2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அணியில் இடம் பிடித்தார். ஆனால் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.[14] பின் 2018 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இடம் பிடித்தார்[15].பின் அக்டோஅப்ர் 7 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[16] இந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.

சான்றுகள்[தொகு]

 1. "Bilal Asif". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 July 2015.
 2. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்த்த நாள் 6 August 2018.
 3. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 August 2018.
 4. "Records | Twenty20 matches | Batting records | Most runs in debut match | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283769.html. 
 5. "Group A: Abbottabad Falcons v Sialkot Stallions at Faisalabad, May 15, 2015 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/872579.html. 
 6. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்த்த நாள் 21 April 2018.
 7. "Pakistan Cup 2018, Sindh: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்த்த நாள் 4 May 2018.
 8. "Mohammad Irfan returns to ODI squad". ESPNcricinfo. ESPN Sports Media (3 July 2015). பார்த்த நாள் 3 July 2015.
 9. "Pakistan tour of Zimbabwe, 2nd ODI: Zimbabwe v Pakistan at Harare, Oct 3, 2015". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 October 2015.
 10. "Pakistan vs Zimbabwe third ODI". ESPNcricinfo. ESPN Cricinfo (5 October 2015). பார்த்த நாள் 5 October 2015.
 11. "Bilal Asif reported for suspect action". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 October 2015.
 12. "Bilal to join Pakistan squad, Azhar to return home". ESPNcricinfo (ESPN Sports Media). 19 October 2015. http://www.espncricinfo.com/pakistan-v-england-2015-16/content/story/930439.html. பார்த்த நாள்: 19 October 2015. 
 13. "Bilal Asif cleared by ICC after testing". ESPNcricinfo (ESPN Sports Media). 30 October 2015. http://www.espncricinfo.com/pakistan-v-england-2015-16/content/story/935093.html. பார்த்த நாள்: 30 October 2015. 
 14. "Uncapped Hamza, Sohail picked for SL Tests". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 September 2017.
 15. "1st Test, Australia tour of United Arab Emirates at Dubai, Oct 7-11 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 October 2018.
 16. "Pakistan vs Australia, 1st Test: Bilal Asif's Six-Wicket Haul Puts Pakistan In Command On Day Three". NDTV. பார்த்த நாள் 9 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலால்_ஆசிப்&oldid=2714421" இருந்து மீள்விக்கப்பட்டது