பிலாங்னா ஆறு

ஆள்கூறுகள்: 30°24′N 78°29′E / 30.400°N 78.483°E / 30.400; 78.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகீரதி நதி வரைபடம்

பிலாங்னா ஆறு (Bhilangna River) என்பது இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள இமயமலையில் உருவாகும் ஒரு ஆறாகும். இது இந்தியாவின் கங்கை நதியின் மூல ஓடையான பாகீரதி ஆற்றின் முக்கிய துணை ஆறாகும் . பிலாங்னா என்பது பில் மற்றும் கங்கையின் கலவையாகும்.[1]

பிரதான பிலங்னா, காட்லிங் பனிப்பாறையின் அடிவாரத்தில் உருவாகிறது. இதன் உயரம் சுமார் 3,717 m (12,195 அடி) ஆகும். இது கோமுகம் பனிக் குகைக்கு தெற்கே 50 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோமுகம் பாரம்பரியமாகப் பாகீரதி மற்றும் கங்கை ஆறுகளின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. பிலாங்னா ஆற்றில் தேரி அணையின் தளமான பழைய நியு தெக்ரியில் பாய்கிறது. இது இதன் முக்கிய துணை நதியான பால் கங்கையை கன்சாலியில் சந்திக்கிறது (உயரம் 976 m (3,202 அடி) ).

குக்லி தார் மலையின் அடிவாரத்தில் (உயரத்தில் 4,600 m (15,100 அடி)) உருவாகியுள்ள பால் கங்கை என்பது தாரம் கங்கை என்ற சிறிய துணை ஆற்றைக் கொண்டுள்ளது. இது 1,524 m (5,000 அடி) உயரத்தில் உள்ள தாதி கத்தூரில் (புத்த கேதார்) தாரம் கங்கையினைச் சந்திக்கிறது.

கட்லிங் மலையேற்றப் பாதை பிலங்னாவை ஒட்டி செல்கிறது. இது சாலை வழியாக அணுகக்கூடிய கடைசி புள்ளியான குட்டுலிருந்து தொடங்கி 3700 மீட்டர் உயரமுள்ள பனிப்பாறை வரை செல்கிறது. பனிப்பாறையைக் கடந்த பாதையில் மேலும் சென்றால், கேதார்நாத்தை அடையலாம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "किलकिलेश्वर महादेव : चौरास श्रीनगर".

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாங்னா_ஆறு&oldid=3392640" இலிருந்து மீள்விக்கப்பட்டது