உள்ளடக்கத்துக்குச் செல்

பிறையான் ஜார்ஜ் வில்லியம் மேன்னிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறையன் ஜி. டபிள்யூ. மேன்னிங்கு
Brian G. W. Manning
பிறப்பு(1926-05-14)14 மே 1926
ஆன்ட்சுவர்த், பர்மிங்காம், இங்கிலாந்து
இறப்பு10 நவம்பர் 2011(2011-11-10) (அகவை 85)
உவொர்சுட்டர்சயர்
தேசியம்பிரித்தானியர்
பணிவானியலாளர்

பிறையான் ஜார்ஜ் வில்லியம் மேன்னிங்கு (Brian George William Manning, 14 மே 1926 – 10 நவம்பர் 2011)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளர். இவர் 19 சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.[2] இவர் பர்மிங்காமில் 1926 இல் பிறந்தார். இவர் தனது தந்தை பணிபுரிந்த தொழிற்சாலையின் கூரையிலிருந்து எடுத்த இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்த கண்ணாடித் துண்டிலிருந்து தனது முதல் கண்ணாடியை உருவாக்கினார். இவர் பொறியியல் வரைவாளராகப் பணியைத் தொடங்கிப் பின்னர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வானிலையியலாளர் ஆனார். இவர் 1950 களின் கடைசியில் வீட்டுப் பணிப்பட்டறையில் ஒளிக் குறுக்கீட்டுக் கட்டுபாட்டு கோடிடும் எந்திரத்தை கட்டியமைத்தார். இது உயர்தர 2க்கு 3 அங்குல வரிவெளியை உருவாக்கியது.[3] 1990 இவருக்கு எச். டி. டால் பரிசு வழங்கப்பட்டது.[3][4]

கண்டுபிடிப்புகள்

[தொகு]

சிறுகோள் மையம் இவர் இங்கிலாந்து கிடெர்மினிசுட்டர் அருகேயுள்ள் சுட்டேகன்பிரிட்ஜ் வான்காணகத்தில் இருந்து1989 முதல் 1997 வரை 19 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக (பவாக 494) கூறுகிறது.[2] பிறையான் மேன்னிங்கின் கண்டுபிடித்த பெரும்பட்டைச் சிறுகோள்கள் பின்வருமாறு:

பிறையான் மேன்னிங்கின் கண்டுபிடித்த சிறுகோள்கள் (i)
4751 அலைசுமேன்னிங்கு17 ஜனவரி 1991MPC
4506 என்றீ24 மார்ச்சு 1990MPC
7239 மோபர்லி4 அக்தோபர் 1989MPC
7465 முங்கன்பர்31 அக்தோபர் 1989MPC
7519 பவுல்குக்31 அக்தோபர் 1989MPC
4 நவம்பர் 1989MPC
6156 தால்12 ஜனவரி 1991MPC
6191 ஈடெசு22 ந்வம்பர் 1989MPC
8166 புசைன்சுகி12 ஜனவரி 1991MPC
8545 மெக்கீ2 ஜனவரி 1994MPC
Discoveries by Brian G. W. Manning (ii)
8914 நிக்ஜேம்சு25 திசம்பர் 1995MPC
10381 மாலின்சுமித்]]3 செப்டம்பர் 1996MPC
10515 ஓல்டு ஜோவே31 அக்தோபர் 1989MPC
10538 தொரோடே11 நவம்பர் 1991MPC
15347 கால்ன்சுட்டூவார்ட்26 அக்தோபர் 1994MPC
24728 சுக்காகெல்11 அக்தோபர்1991MPC
52633 துர்வே30 நவம்பர் 1997MPC
(69273) 1989 TN14 அக்தோபர் 1989MPC
(100690) 1997 YY625 திசம்பர் 1997MPC

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hurst 2012, p. 118.
  2. 1 2 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. Retrieved 20 June 2016.
  3. 1 2 William Liller (1992). The Cambridge Guide to Astronomical Discovery. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 121. ISBN 0-521-41839-9.
  4. EBSCOhost Connection
  • Hurst, Guy M. 'Brian George William Manning' in the Journal of the British Astronomical Association, April 2012, Volume 22, Number 2.

வெளி இணைப்புகள்

[தொகு]