பிறள்பகர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒப்பந்தச்சட்டத்தில் பிறள்பகர்வு (Misrepresentation) என்பது ஒரு திறத்தவர்(party) மறு திறத்தவரை நோக்கி உண்மைக்கு புறம்பான கூற்றுக்களைக் கூறி அத்திறத்தவர்களை தூண்டச்செய்து ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தலைக்குறிக்கும். வியாபாரி ஒருவர் தனது விற்பனைப்பண்டத்தின் தன்மை,தரம்,உற்பத்திமுறை பற்றி வாடிக்கையாளரிடையே கூறுகின்ற பொய்யான கூற்றுக்களும் பிறள்பகர்வாகும்.நடத்தைமூலமோ அல்லது வார்த்தைமூலமோ பிறள்பகர்வு தோன்றுவிக்கப்படலாம்.அதாவது, உணமையினை பிறள்வாககூறுவது மட்டுமல்லாது அதனை தெரிந்திருந்தும் மறத்தலையும் குறிக்கும்.

பிறள்பகர்வால் பாதிக்கப்பட்ட திறத்தவர்கள் நீதிமன்றினை நாடி தமக்கான குறைதீர்பினை பெறலாம்.

பிறள்பகர்வின் வகைகள்[தொகு]

  1. மோசடியான பிறள்பகர்வு - (Fraudulent misrepresentation) மனமறிய உண்மையல்ல என தெரிந்திருந்தும் பொய்யான கூற்றுக்களை பகர்தலைக்குறிக்கும்.
  2. Negligent misrepresentation - உண்மையாக இருக்கும் என நினைத்து அல்லது நம்பி அதனை ஆராயாமல் மறுதிறத்தவருக்கு பகர்தலைக்குறிக்கும்.
  3. Innocent misrepresentation

தீர்ப்புக்கள்[தொகு]

நீதிமன்றானது கூற்றுக்களை ஆராய்ந்தும் அக்கூற்றுக்கள் பாதிக்கப்பட்ட திறத்தவரை ஒப்பந்தத்திற்கு தூண்டியிருந்ததா எனவும் பரீசிலனை செய்தும் பிறள்பகர்வா என கண்டறிகின்றது. அவ்வாறு பிறள்பகர்வென காணுமிடத்து நீதிமன்றானது ஒப்பந்தத்தினை ரத்து செய்வதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈட்டினையும் பெற்றுத்தரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறள்பகர்வு&oldid=1344605" இருந்து மீள்விக்கப்பட்டது