பிறபண்பாட்டுமயமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிறபண்பாட்டுமயமாதல் (Transculturation) என்பது, பிற பண்பாட்டுக் கூறுகளின் அறிமுகத்தால் ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றத்தைக் குறிக்கின்றது[1]. இது பண்பாடுகள் இடையேயான கலப்பு மற்றும் ஒருங்கிணைவுத் தோற்றப்பாடுகளை விளக்குகின்ற ஒரு சொல்லாகவும் இருக்கின்றது. இது, காலப்போக்கில் மக்கள் தங்களிடையேயான முரண்பாடுகளைப் பெருப்பிக்காமல், தீர்த்துக் கொள்ளுகின்ற ஒரு இயல்பான போக்கை வெளிப்படுத்துகின்ற ஒன்று எனக் கருதப்படுகின்றது.

பொதுவாக, ஒரு நோக்கில், பிறபண்பாட்டுமயமாக்கம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாடுகளோடு சம்பந்தப்பட்ட, போர், இன முரண்பாடுகள், இனவாதம், கலப்பு மணங்கள் போன்ற விடயங்களை உட்படுத்துகின்றது, இன்னொரு நோக்கில், முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்போது, ஏற்படுகின்ற நிகழ்வுகளின் ஒரு விரும்பத்தக்க அம்சமாக இது அமைவதாகக் கொள்ளப்படுகின்றது.


குறிப்புகள்[தொகு]

  1. டிக்சனரி.கொம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறபண்பாட்டுமயமாதல்&oldid=3078804" இருந்து மீள்விக்கப்பட்டது