பிர்லா மந்திர் (ஐதராபாத்)
பிர்லா மந்திர் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1976 களில் |
பிர்லா மந்திர் (Birla Mandir) என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். இது உசைனிசாகர் ஏரியின் தென்கரையில் உள்ள சிறு குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலின் மேல்தளத்திலிருந்து நகரின் முழுத் தோற்றத்தினைக் காணலாம். படிக்கட்டுகளின் வழியாக மூலவர் சன்னிதியினை அடைந்தால், அங்கு திருப்பதியில் உள்ளது போன்ற வெங்கடேசபெருமாளை தரிசிக்கலாம். முழுக் கோவிலும் நுட்பமான கலைநயமிக்க சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. இச்சிற்பங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நிகழ்வுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. மேலும் பல இந்து- ஆண், பெண் தெய்வங்களின் உருவங்களும் உள்ளன.
இதன் அருகில் பிர்லா கோளரங்கமும் அறிவியல் காட்சியகமும் இருக்கின்றன. காட்சிகள் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அமைக்கப்பட்டள்ளன. லும்பினி பூங்காவும் அருகிலேயே உள்ளது. ஐதராபாத் இரயில் நிலையத்திலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. மாநில சட்டசபையும் ஓர் அருங்காட்சியகமும் அப்பகுதியில் காண வேண்டியவையாகும்.