பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்
பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் (Birla Science Museum) இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இது கட்டிடப் பொறியாளர் ஏ. சிங்காரவேலுவால் கட்டப்பட்டது. இம்மையம் கோளரங்கம், அருங்காட்சியகம், அறிவியல் மையம், கலைக்கூடம் மற்றும் ஒரு டைனோசர் காட்சியகம்[1] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தைக் கொண்ட இம்மையம் 1990 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.[2]
கோளரங்கம்
[தொகு]பிர்லா கோளரங்கம் அறிவியல் மையத்தின் ஒரு பிரிவு ஆகும். கோளரங்கம் முன்னாள் முதலமைச்சர் என். டி. ராமராவால் செப்டம்பர் 8, 1985 அன்று திறந்துவைக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள மூன்று பிர்லா கோளரங்கங்களில் ஒன்றாகும். மற்றவை கொல்கத்தாவிலுள்ள எம். பீ. பிர்லா கோளரங்கம் மற்றும் சென்னையிலுள்ள பி. எம். பிர்லா கோளரங்கம் ஆகும்.
டைனோசர் காட்சியகம்
[தொகு]கோளரங்கம் மற்றும் அறிவியல் மையத்துடன் இம்மையத்தில் 2000 ஆம் ஆண்டு டைனோசர் காட்சியகம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது[3]. அதனுடைய சிறப்பம்சமாக, இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் வழங்கப்பட்ட,160 மில்லியன் வருட வயதுடைய, தெலுங்கானா அடிலாப்பில் தோண்டியெடுக்கப்பட்ட கோடசரஸ் யூமன்ப்பாலியென்ஸிஸ் என்ற டைனோசர் வகை காட்சிக்கு உள்ளது.[4] இங்கு டைனோசர் முட்டைகள், கடற்சிப்பிகள் மற்றும் கல் மர படிமங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் இன்னொரு பகுதியான ஒருங்கிணைந்த இயற்கை வரலாற்றுக் கலைக்கூடம், 2000 ஆம் ஆண்டு சூலை மாதம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள அரிய வகை டைனோசர் தொன்படிமங்கள், 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கொடசரசு டைனோசர்கள் பார்வையாளர்களைப் பிரமிக்கச்செய்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Let's Go India and Nepal, 8th Ed. 2003. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-32006-X.
- ↑ "Science Museum". Science Museum. Archived from the original on 12 சனவரி 2012.
- ↑ "Dinosaurium". Dinosaurium. Archived from the original on 14 சனவரி 2012.
- ↑ "Competition Science Vision". October 2000. https://books.google.com/books?id=XOgDAAAAMBAJ&pg=PA1025. பார்த்த நாள்: 2012-01-12.
வெளியிணைப்புகள்
[தொகு]