பிர்லாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிர்லாபூர்
Birlapur

বিড়লাপুর
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்22,078
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்s24pgs.gov.in

பிர்லாபூர் (Birlapur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலிப்பூர் சதார் உட்கோட்டத்தின் நடாக்காலி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பட்ச் பட்ச் I சிடி கட்டைடத்தொகுதியில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். [1]

புவியியல் அமைப்பு[தொகு]

22.4358° வடக்கு 88.14729° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பிர்லாபூர் நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிர்லாபூரின் மொத்த மக்கள் தொகை 22,078 ஆகும். இம்மக்கள் தொகையில் 52% பேர் அதாவது 11,542 பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் அதாவது 10536 பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் மொத்தம் 3004 பேர் ஆவர். பிர்லாபூரில் படிப்பறிவுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14,829 பேர் ஆகும். 77.74 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். [2] இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3] பிர்லாபூரின் மொத்த மக்கள் தொகை 19,830 ஆகும். இம்மக்கள் தொகையில் 55% பேர் ஆண்கள் மற்றும் 45% பேர் பெண்கள் ஆவர். பிர்லாபூரின் கல்வியறிவு சதவீதம் 61% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும்.

வரலாறு[தொகு]

பிர்லாபூர் நகரம் எம்.பி பிர்லாவால் உருவாக்கப்பட்டது. வெவ்வேறுவகையான தொழிற்சாலைகள் பலவற்றை அவர் இங்கு நிறுவினார். இந்நகரம் பிர்லா சணல் ஆலைக்காக புகழ்பெற்ற நகரமாக விளங்குகிறது. இதுதவிர ஒரு கால்சியம் கார்பைட்டு தொழிற்சாலை, ஒருலினோனியம் தொழிற்சாலை, ஒருசணல் இழை தொழிற்சாலை மற்றும் வாகனச்சீராக்கித் தொழிற்சாலை போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தி வாயிலாக கற்பிக்கும் பிர்லாபூர் வித்யாலயா என்ற இருபாலர் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் நிரந்தரமான சந்தைப் பகுதி ஒன்றும் இங்கு இயங்குகிறது. தொழிற்சாலைகளில் மின்னுற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை கட்டிக்கொடுத்துள்ள குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

பல பிர்லா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்த அமைதியான மற்றும் புனிதமான ஒரு நகர்ப்புற கிராமமாக இவ்வூர் உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், நிதி நெருக்கடி காரணமாக பிர்லாபூரில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எனினும், குழந்தைகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இவ்வூர் மிகச்சிறப்பான இடமாக விளங்குகிறது. இந்நகரின் செல்வாக்கிற்கும் மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கும் புதிய முதலீட்டாளர்களின் கண்பார்வை இந்நகருக்குத் தேவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India". District-wise list of stautory towns. Directorate of census operations, West Bengal. 2007-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)". 2011 census: West Bengal – District-wise CD Blocks. Registrar General and Census Commissioner, India. 26 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்லாபூர்&oldid=3221408" இருந்து மீள்விக்கப்பட்டது